TN University Exams Postponed: பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - அமைச்சர் பொன்முடி
கொரோனா காரணமாக எழுத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்.
கொரோனா தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியதை அடுத்து, தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுதொடார்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், “தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. முதலமைச்சர் ஆலோசனைப்படியும், கொரோனா தாக்கம் காரணமாகவும் அனைத்து பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்” என்று கூறினார். NEET PG Counselling: 12ம் தேதி முதல் நீட் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு - மத்திய அரசு அறிவிப்பு
மேலும், தேர்வுகளுக்கு தயாராவதற்காகவே மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
#BREAKING | தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு https://t.co/wupaoCQKa2 | #TNColleges | #Corona | #Exams pic.twitter.com/FzAUvzK05p
— ABP Nadu (@abpnadu) January 10, 2022
முன்னதாக, தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜனவரிம் 20ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. TN Higher Education | அனைத்து பல்கலை.களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித்துறை உத்தரவு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்