மேலும் அறிய

Exam Time Table: காலாண்டுத் தேர்வு தேதிகள், விடுமுறை எப்போது? பள்ளி நாட்காட்டி இதோ!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளும் விடுமுறை விடும் நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2023-24ஆம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளும் விடுமுறை விடும் நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை குறித்து விளக்கமாகக் காணலாம். 

காலாண்டுத் தேர்வு எப்போது?

2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 4 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடங்கி, செப். 27 வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. செப். 28ஆம் தேதி காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 1 முதல்  3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப். 23ஆம் தேதி தேர்வு விடுமுறை தொடங்க உள்ளது. தேர்வு முடிந்து அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

டிசம்பரில் அரையாண்டுத் தேர்வு

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11, 12ஆம் வகுப்புகளுக்கும் டிசம்பர் 11ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்குகிறது. அதேபோல டிசம்பர் 13ஆம் தேதி 6 - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

நடந்து முடிந்த அலகுத் தேர்வு

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான யுனிட் தேர்வு எனப்படும் அலகுத் தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெற்றது. 2ஆவது அலகுத் தேர்வு நாளை (ஆகஸ்ட் 29) முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் முதல் மிட்- டெர்ம் தேர்வு நடைபெற்றது. 

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான ஒரு மதிப்பெண் தேர்வு டிசம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் ஜனவரி 8ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன. 10ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் ஜனவரி 22ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன.

முழு ஆண்டுத் தேர்வு எப்போது?

மார்ச் 18ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 8ஆம் தேதி 10ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதேபோல மார்ச் 19ஆம் தேதி 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. 

6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 3ஆவது வாரத்தில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு பள்ளி இறுதி வேலைநாளாக ஏப்ரல் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
சோகம்! தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி
சோகம்! தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPK Jayakumar Death : காங். ஜெயக்குமார் மரணம் வெளியான அதிர்ச்சி புகைப்படம் திடீர் திருப்பம்!Ameer on NEET : ”புர்காவை கழட்டுமா”அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்..நீட்-ஐ புறக்கணித்த  அமீர் மகள்Savukku Shankar  : ”சவுக்கு உயிரோட இருக்க மருத்துவ உதவி முக்கியம்”பகீர் கிளப்பிய வழக்கறிஞர்Seeman about Ilayaraja :  ”இளையராஜா கேட்டது நியாயம்! நம்ம தப்பா புரிஞ்சுக்கிறோம்” ஆதரவாக பேசிய சீமான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
சோகம்! தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி
சோகம்! தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
TN Weather: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - அடுத்த 7 தினங்களுக்கான வானிலை அப்டேட்!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - அடுத்த 7 தினங்களுக்கான வானிலை அப்டேட்!
Akshaya Tritiya 2024 Date: அட்சய திரிதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
அட்சய திரிதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
kerala Elephant Attack: யானை மிதித்து தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
kerala Elephant Attack: யானை மிதித்து தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
Teachers Transfer: ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - வெளியான முக்கியத் தேதிகள்!
Teachers Transfer: ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - வெளியான முக்கியத் தேதிகள்!
Embed widget