10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் வழங்கவேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, பின்னாளில் பத்தாம் வகுப்பை கல்வித்தகுதியாக கொண்ட அரசு பணிகளுக்கு செல்வதிலும், மேல்நிலை வகுப்புகளில் சேர்வதிலும் சிக்கல் ஏற்படக்கூடும்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் எந்த மதிப்பெண்ணும் குறிப்பிடப்படாது என்றும், தேர்ச்சி என்ற குறிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மை என்றால் அரசின் முடிவு மிகவும் தவறானது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் எந்த மதிப்பெண்ணும் குறிப்பிடப்படாது என்றும், தேர்ச்சி என்ற குறிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மை என்றால் அரசின் முடிவு மிகவும் தவறானது!
மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை என்றால், பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, பின்னாளில் பத்தாம் வகுப்பை கல்வித் தகுதியாக கொண்ட அரசு பணிகளுக்கு செல்வதிலும், மேல்நிலை வகுப்புகளில் சேர்வதிலும் சிக்கல் ஏற்படக்கூடும். கொரோனாவால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட கடந்த ஆண்டு கூட சான்றிதழ்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மதிப்பெண்கள் வழங்கப்படாவிட்டால், அதுவே மாணவர்களையும், அவர்களின் கல்வித்திறனையும் சிறுமைப்படுத்தும் செயலாகிவிடும்.
2020-21 கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தது 3 அல்லது 4 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு ஆணையிடவேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, 2020-21-ஆம் கல்வியாண்டில் 9,10,11-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சிப் பெற்றதாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும், மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், " 2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரக பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெறுகின்றனர்.
இவர்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பயின்று வருபவர்களின் பெயர்ப்பட்டியல் (Nominal Roll), சார்ந்த பள்ளிகளிலிருந்து பெறப்பட்டதன் அடிப்படையில், அவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான உரிய பதிவுகளுடன் கூடிய சான்றிதழை வழங்குமாறு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டது.
NEET Exam 2021: பொதுத்தேர்வு இல்லை, நீட் தேர்வு வேண்டாம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.