மேலும் அறிய

TNGASA Admission 2024: மீண்டும் தொடங்கிய மாணவர் சேர்க்கை; இன்னும் 2 நாள்தான்- அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துவிட்டீர்களா?

அரசுக் கலைக் கல்லூரிகளில் 64 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்த நிலையில், காலி இடங்களை நிரப்பவும் மாணவ- மாணவியர் நலன் கருதியும் மீண்டும் விண்ணப்பப் பதிவு இன்று (ஜூலை 3) தொடங்கி உள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

அரசுக் கலைக் கல்லூரிகளில் 64 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்த நிலையில், காலி இடங்களை நிரப்பவும் மாணவ- மாணவியர் நலன் கருதியும் மீண்டும் விண்ணப்பப் பதிவு இன்று (ஜூலை 3) தொடங்கி உள்ளது. மாணவர்கள் ஜூலை 5 வரை 3 நாட்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.  

மேலும், ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறோரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணைய தளத்துக்குச் சென்று, விண்ணப்பப் பதிவு குறித்து அறிந்துகொள்ளலாம்.

முன்பதிவு முக்கியம்

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம். அதில், விண்ணப்பதாரர் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பிளஸ் 1 தேர்ச்சி, தகுதித் தேர்வு உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதற்கு சரியான தகவல்களை உள்ளிட வேண்டும்.

விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் குறித்து முழுமையாக அறிய https://static.tneaonline.org/docs/arts/tamil_instruction.pdf?t=1684734156651 என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். ஸ்டெப் பை ஸ்டெப்பாக வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

இணைய வசதி இல்லாத மாணவர்கள், அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் (Admission Facilitation Center (AFC)- 2024) மூலமாக விண்ணப்பிக்கலாம்.

3 வகை தரவரிசைப் பட்டியல்

3 வகைகளில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். தமிழ், ஆங்கிலம், பொது தரவரிசைப் பட்டியல் தனித்தனியாக வெளியிடப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலத் தரவரிசைப் பட்டியல் இலக்கியப் படிப்புகளுக்கும் பொது தரவரிசைப் பட்டியல் மற்ற அனைத்து படிப்புகளின் சேர்க்கைக்கும் பயன்படுத்தப்படும்.

விண்ணப்பித்து முடித்த பிறகு, மெயில் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பதிவிட்டு லாகின் செய்யலாம்.   

கூடுதல் தகவல்களுக்குhttps://www.tngasa.in/

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் முழு பட்டியலைக் காண: https://static.tneaonline.org/docs/arts/college_list.pdf?t=1684479144557 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

கூடுதல் விவரங்களுக்கு: tngasa24@gmail.com
தொலைபேசி எண்கள்: 044 - 24343106, 044 - 24342911

தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இதில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில், 64 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தது. இதை அடுத்து மீதமுள்ள 36 சதவீத இடங்களை நிரப்ப, மீண்டும் விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget