முடிவுக்கு வருமா நீட்? ஏ.கே ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைப்பு

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், " ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ்வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாசு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனைக் கருதியே, சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டுமென்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12-வது வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி இதற்கான பல சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு. இந்தக் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில், நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்திட உறுதி பூண்டுள்ளது.முடிவுக்கு வருமா நீட்? ஏ.கே ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைப்பு

இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. இராஜன் தனைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும்" என்று தெரிவித்தது.  

மேலும், வாசிக்க: நீட் தேர்வை ரத்து செய்யாமல் ப்ளஸ் 2 தேர்வை ரத்து செய்வதால் எந்தப் பயனுமில்லை - எம்.பி. சு.வெங்கடேசன் 

நீட் தேர்வு நடத்த இதுதான் நேரமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

Tags: neet neet exam AK Rajan Committee NEET Exam Committee Tamil Nadu NEET Exam Latest news Tamilnadu NEET Exam News updates NEET Exam Announcement 2021 NEET Exam News 2021 NEET Exam date

தொடர்புடைய செய்திகள்

UPSC தேர்வில் வெல்வது எப்படி? - டிப்ஸ் சொல்கிறார் சிருஷ்டி ஜெயந்த் தேஷ்முக்..!

UPSC தேர்வில் வெல்வது எப்படி? - டிப்ஸ் சொல்கிறார் சிருஷ்டி ஜெயந்த் தேஷ்முக்..!

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் வழங்கவேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் வழங்கவேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

தேர்வு இல்லை, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : தென்னக ரயில்வே பயிற்சி வேலையில் விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு இல்லை, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : தென்னக ரயில்வே பயிற்சி வேலையில் விண்ணப்பிப்பது எப்படி?

உயர் கல்வியில் முக்கியத்துவம் பெரும் மாநில அரசுகள்: அகில இந்திய உயர்கல்வி அறிக்கை கூறுவது என்ன?

உயர் கல்வியில் முக்கியத்துவம் பெரும் மாநில அரசுகள்:  அகில இந்திய உயர்கல்வி அறிக்கை கூறுவது என்ன?

உயர்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

உயர்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சாதுர்யம் பேசாதடி.... பத்மினி சலங்கைக்கு பதில் சொல்லடி! ஆட வைத்த ‛டாப்’ 5 பாடல்கள்!

சாதுர்யம் பேசாதடி.... பத்மினி சலங்கைக்கு பதில் சொல்லடி! ஆட வைத்த ‛டாப்’ 5 பாடல்கள்!

டெல்டா பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு; மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு; மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

'சந்தன பொட்டு, கதம்பம், சம்மங்கி மாலை' டிரான்ஸ்பார்மருக்கு விபூதியடித்த அமைச்சர்.!

'சந்தன பொட்டு, கதம்பம், சம்மங்கி மாலை' டிரான்ஸ்பார்மருக்கு விபூதியடித்த அமைச்சர்.!