மேலும் அறிய

திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு?- சர்ச்சைகளை அடுத்து அரசு விளக்கம்

Employment Under DMK Govt: திமுக ஆட்சியில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து சர்ச்சைகள் கிளம்பியதை அடுத்து, வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தமிழக அரசு அளித்துள்ளது.

திமுக ஆட்சியில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதை அடுத்து, வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தமிழக அரசு அளித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு தெரிவித்து உள்ளதாவது:

’’சென்னையில்‌ 16.02.2024 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்‌, தமிழ்நாட்டில்‌ இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மாதம்‌ வரை 60,567 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விபரத்தை முதலமைச்சர்‌‌ குறிப்பிட்டார்‌. இதுகுறித்து சில ஊடகங்களில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்குபின்வரும்‌ விவரங்கள்‌ தெரிவிக்கப்படுகின்றது.

எந்தெந்த தேர்வு வாரியங்கள்?

தமிழ்நாட்டில்‌, அரசுப்‌ பணிக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக உள்ள தேர்வு முகமைகளான தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌, மருத்துவப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌, சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌, கடந்த இரண்டரை ஆண்டுகளில்‌ வெவ்வேறு அரசுத்‌ துறைகளில்‌ உள்ள காலிப்‌ பணியிடங்களுக்காக, ஜனவரி 2024 வரை, 27,858 அரசுப்‌ பணியாளர்கள்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளனர்‌.

இதுதவிர, பல்வேறு அரசுத்‌ துறைகள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள்‌ பணி நியமனம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌.

துறை வாரியான நியமனம்

துறைவாரியான நியமனங்களைப்‌ பொறுத்தவரை நீதித் துறையில்‌ 5,981 பணியிடங்களும்‌, பள்ளிக் கல்வித்துறையில்‌ 1,847 பணியிடங்களும்‌, வருவாய்த்‌ துறையில்‌ 2,996 பணியிடங்களும்‌, சுகாதாரம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல வாழ்வுத்‌ துறையில்‌ 4,286 பணியிடங்களும்‌, ஊரக வளர்ச்சித்‌ துறையில்‌ 857 பணியிடங்களும்‌, உயர்‌ கல்வித்‌ துறையில்‌ 1,300 பணியிடங்களும்‌, காவல்துறை, நகராட்சி நிர்வாகம்‌, வேளாண்மை, சமூக நலம்‌ மற்றும்‌ சத்துணவு போன்ற அரசின்‌ பிற துறைகளின்‌ வாயிலாக 15,442 பணியிடங்களும்‌ அந்தந்தத்‌ துறைகளின்‌ வழக்கமான நடைமுறைகளைப்‌ பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டன. இவ்வகையில்‌ 32,709 இளைஞர்களுக்கு பணி நியமனங்கள்‌ வழங்கப்பட்‌டுள்ளன.

ஆக மொத்தம்‌, இந்த அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்திற்குள்‌ (27,858 * 32,709) 60,567 நபர்களுக்கு அரசுப்‌ பணி நியமனம்‌ வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, தமிழ்‌ நாட்டில்‌ படித்த இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கில்‌ வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்களும்‌ நடத்தப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ வாயிலாக பன்னாட்டு நிறுவனங்களில்‌ வேலை 

இம்மாநாட்டில்‌ மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ வாயிலாக நம்‌ மாநிலத்தின்‌ இளைஞர்களுக்கு இந்திய மற்றும்‌ பன்னாட்டு நிறுவனங்களில்‌ வேலை வாய்ப்புகளை உருவாக்கிட தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது எனத்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
Embed widget