மேலும் அறிய

Puthumai Penn Scheme: மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை : முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்..!

புதுமைப்‌ பெண்‌ திட்டத்தில்‌ உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும், ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

புதுமைப்‌ பெண்‌ திட்டத்தில்‌ உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும் ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது‌. நவம்பர்‌ 1 ஆம் தேதி முதல்‌ நவம்பர்‌ 11 ஆம்‌ தேதி வரை இதற்கு விண்ணப்பிக்க முடியும். 

இதுகுறித்துச் சென்னை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

’’புதுமைப்‌ பெண்‌ திட்டத்தில்‌ (Puthumai Pen Thittam) உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகள், நவம்பர்‌ 1 ஆம் தேதி முதல்‌ நவம்பர்‌ 11 ஆம்‌ தேதி வரை விண்ணப்பிக்கலாம்‌.

தமிழ்நாடு முதலமைச்சரால்‌ 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு/ தொழில்நுட்பப் படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌தோறும்‌ 1000 ரூபாய்‌ வழங்கும்‌ புதுமைபெண்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது. இதுவரை 2,3 மற்றும்‌ 4ம்‌ ஆண்டில்‌ பயிலும்‌ 1.13 லட்சம்‌ மாணவிகள்‌ இத்திட்டத்தில்‌ உதவித் தொகையை பெற்று பயன்‌ அடைந்துள்ளார்கள்‌.

தற்போது http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணைய தளத்தில் முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணவிகளும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

இந்த வலைத்தளத்தில்‌, மாணவிகள்‌, அனைவரும்‌ சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‌ வாயிலாக நவம்பர்‌ 1 ஆம்‌ தேதி முதல்‌ 11 ஆம்‌ தேதி வரை பதிவு செய்யலாம்‌. அரசு பள்ளிகளில்‌ பயின்ற மாணவிகள்‌ மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்‌, மாணவிகள்‌ தங்கள்‌ கல்வி நிறுவனங்கள்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பம்‌ செய்ய வேண்டும்‌. நேரடியாக விண்ணப்பிக்கக்‌ கூடாது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ முறை மற்றும்‌ தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும்‌ கல்வி பயிலும்‌ நிறுவனங்களில்‌ நவம்பர்‌ 11 ஆம்‌ தேதி வரை சிறப்பு முகாம்கள்‌ நடைபெறும்‌. 

Puthumai Penn Scheme: மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை : முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்..!

மாணவிகள்‌ தவறாமல்‌ அவர்களுடைய ஆதார்‌ அட்டை மற்றும்‌ (கல்வி மேலாண்மை தகவல்‌ திட்ட எண்ணுக்காக) எமிஸ், மாற்றுச்‌ சான்றிதழ்‌ ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்‌. மேலும்‌, தற்போது 2,3 மற்றும்‌ 4ம்‌ ஆண்டுகளில்‌ படிக்கும்‌ மாணவிகள்‌, முதற்கட்டத்தில்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்க தவறியவர்கள்‌, தற்போது விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌, விண்ணப்பம்‌ பூர்த்தி செய்யும்‌ முறையில்‌ மாணவிகளுக்கு சந்தேகங்கள்‌ ஏதும்‌ இருப்பின்‌, சமூக நல இயக்குநராக அலுவலகத்தில்‌ மாநில அளவில்‌ செயல்படும்‌ உதவி மையத்தினை திங்கள்‌ முதல்‌ வெள்ளிவரை, காலை 10 மணி முதல்‌ 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்‌.

தொலைபேசி எண்கள்: 9150056809,9150056805, 9150056801 மற்றும்‌ 9150056610 ஆகிய எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌. 

மேலும்‌ mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல்‌ அனுப்பலாம்‌.

மேல் படிப்பு / தொழில்நுட்ப படிப்புகளில்‌ முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ தகுதிவாய்ந்த மாணவிகள்‌ அனைவரும்‌ 11.11.2022 க்குள்‌ தவறாமல்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’.

இவ்வாறு சென்னை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
TN Weather: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க! இன்று இரவு 5 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை அப்டேட்..
சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க! இன்று இரவு 5 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை அப்டேட்..
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
TN Weather: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க! இன்று இரவு 5 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை அப்டேட்..
சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க! இன்று இரவு 5 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை அப்டேட்..
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
Good bad ugly: அஜித் படத்தை கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பு நிறுவனம்! என்னய்யா சொல்றீங்க?
Good bad ugly: அஜித் படத்தை கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பு நிறுவனம்! என்னய்யா சொல்றீங்க?
"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Embed widget