மேலும் அறிய

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!

இதுதொடர்பான அறிவிப்பை, அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா, அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பி உள்ளார்.

2025- 26ஆம் கல்வி ஆண்டில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக அக்டோபர் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அவகாசம் நவம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை, அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா, அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பி உள்ளார்.

பெயர்ப் பட்டியல் தயாரிப்பு

மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின்‌ பெயர்ப் பட்டியலினை அடிப்படையாகக்‌ கொண்டு, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்விற்கான பள்ளி மாணவர்களின்‌ பெயர்ப் பட்டியல்‌ தயாரிக்கப்பட உள்ளது.

அனைத்து மேல்நிலை பள்ளித்‌ தலைமையாசிரியர்களும்‌ www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்கள்‌ பள்ளிக்கு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்தால்‌ வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதவுள்ள தங்களது பள்ளி மாணவர்களின்‌ நிரந்தரப்‌ பதிவண்‌, பெயர்‌, பிறந்த தேதி, பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்கள்‌ அடங்கிய பட்டியலை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்‌.

என்னென்ன வழிமுறைகள்?

  1. பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட மாணவர்‌ விவரம்‌ அடங்கிய பட்டியலில்‌, தங்கள்‌ பள்ளியில்‌ பயிலும்‌ மாணவர்களது பெயர்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ (Initial and Spelling Mistake only), புகைப்படம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில்‌ திருத்தங்கள்‌ இருப்பின்‌, அதன்‌ விவரங்களை பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழின்‌ நகலுடன்‌ இணைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. 
  2. பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதிய பின்னர்‌, அரசிதழில்‌ பதிவுசெய்து பெயர்‌ மாற்றம்‌ செய்த மாணாக்கர்களுக்கு மட்டும்‌, பத்தாம்‌ வகுப்பு சான்றிதழில்‌ உள்ளவாறு இல்லாமல்‌ அரசிதழில்‌ உள்ளவாறு பெயரை மாற்றம்‌ செய்துகொள்ள அனுமதிக்கப்படும்‌.
  3. பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட மாணவர்‌ விவரம்‌ அடங்கிய பட்டியலில்‌, மாணவர்‌ பெயர்‌, தலைப்பெழுத்து விடுபட்டிருப்பின்‌, தமிழில்‌ தவறாக இருப்பின்‌ அதனை முழுமையாக நீக்கம்‌ செய்து, மீண்டும்‌ யூனிகோட் எழுத்தில்‌ சரியான பெயரை தமிழில்‌ தட்டச்சு செய்தால்‌ மட்டுமே இதனை சரிசெய்ய இயலும்‌.
  4. மாணவரது பெயர்ப்பட்டியலில்‌ திருத்தங்கள்‌ மேற்கொள்வதற்கு அம்மாணவருக்கு பெயர்ப் பட்டியலில்‌ வழங்கப்பட்டுள்ள ஜி.ஆர். எண்‌ குறிப்பிட்டு திருத்தங்கள்‌ குறித்த விவரங்களை மேற்கொள்ள வேண்டும்‌.
  5. பெயர்ப் பட்டியலில்‌ திருத்தங்கள்‌ மற்றும்‌ சேர்க்கை போன்றவற்றினை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பான விவரங்களை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில்‌ அறிந்து கொள்ளலாம்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

School Student: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.1000 உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
School Student: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.1000 உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
மதுரை மாணவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் முகாம்!
மதுரை மாணவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் முகாம்!
சிவகங்கை இளைஞர்களே! நவம்பர் 13 வேலைவாய்ப்பு முகாம்: வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரிய வாய்ப்பு!
சிவகங்கை இளைஞர்களே! நவம்பர் 13 வேலைவாய்ப்பு முகாம்: வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரிய வாய்ப்பு!
விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!
விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
"சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு" - திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர்!
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Embed widget