மேலும் அறிய

அண்ணா பல்கலை. மேம்பாட்டுக்காக ரூ.1,380 கோடி நிதி; தமிழ்நாடு அரசின் மாபெரும் திட்டம்! எதற்கெல்லாம்?

அண்ணா பல்கலை.யை ஆசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்காக 1,380 கோடி ரூபாய் செலவிலான முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பட்டப் படிப்புடன், தொழில்நுட்பப் பயிற்சியும் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வரை இடைநில்லாமல் கற்பதற்குரிய சூழலை உருவாக்கிட, தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

இந்தக் குறிக்கோள்களை எட்டிட கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்தம் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு, கல்வி உதவித் தொகைத் திட்டம் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்

கல்லூரி மாணவர்கள், தம் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக, 2.172 கோடி ரூபாய் செலவில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டு, இதுவரை 6,75,888 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்காக 1380 கோடி ரூபாய் செலவிலான முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரூ.1,380 கோடி ஒதுக்கீடு பின்வருவனவற்றிற்குப் பயன்படுத்தப்படும்:

- ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை நவீனமயமாக்குதல்

- டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்

- வளாக வசதிகளை மேம்படுத்துதல்

- புதுமை மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை ஊக்குவித்தல்

- சர்வதேச கல்வி கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல்

இந்த முயற்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தரவரிசை மற்றும் கல்வி நற்பெயரை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்

கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 909 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விரைவாக மாறிவரும் வகையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளும் 11 அரசுப் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, அதி நவீன உற்பத்தித் திறன் முதலான 8 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget