TN 12th Result 2023: பிளஸ் 2 ரிசல்ட்; கடந்த ஆண்டை விட பின் தங்கிய காஞ்சிபுரம் - முக்கிய தகவல்கள் உள்ளே
TN 12th Result 2023: காஞ்சிபுரம் (kanchipuram) மாவட்டம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இவ்வாண்டு 31 வது இடத்தை பிடித்துள்ளது.

kanchipuram Pass Percentage, TN 12th Result 2023: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதினர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்வுகள் முடிந்த நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்ரல் 11 ஆம் தேதியில் இருந்து 21ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 79 முகாம்கள் அமைக்கப்பட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு திட்டமிட்டபடி மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தது.
காஞ்சிபுரம் (kanchipuram) மாவட்ட முடிவுகள்

தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
தமிழ் நாடு முழுவதும், 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத 8.65 லட்சம் மாணவ,மாணவிகள் விண்னப்பித்த நிலையில், 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வெழுதியவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 4,21,013 ஆகும். மாணவர்கள் எண்ணிக்கை 3லட்சத்து 82, 371 ஆகும். இதில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் எண்ணிக்கை 4, 05, 753, மாணவர்கள் 3, 49, 697 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெளியான தேர்வு முடிவுகள்
அதன்படி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.inwww.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

