மேலும் அறிய

TN 12th Result 2022: 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த குமரி மாவட்டம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எத்தனையாவது இடம் பிடித்தது..?

மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டம் 13வது இடத்தை பிடித்துள்ளது.

12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 9-வது இடத்தில் இருந்த குமரி மாவட்டம் தற்போது 13ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மெட்ரிக் பள்ளிகளில் படித்த 10 ஆயிரத்து 959 மாணவர்களும் 11 ஆயிரத்து 916 மாணவ, மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 875 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்.தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

இதில் 10 ஆயிரத்து 148 மாணவர்களும் 11 ஆயிரத்து 731 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.60 சதவீதம் பேரும் மாணவிகள் 98.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சராசரியாக 95.65 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டம் 13வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வின் போது 95.06 பிடித்து 9வது இடத்தை பிடித்து இருந்த நிலையில் தற்போது 13 -வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்ச்சி விழுக்காடு அதிகரித்த நிலையிலும் மாவட்ட அளவில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவுகளை பார்ப்பதற்காக குவிந்திருந்தனர். பல மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டனர். 10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் குமரி மாவட்டத்தில் 11405 மாணவர்களும் 11 ஆயிரத்து 580 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 985 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 10893 மாணவர்களும் 11 ஆயிரத்து 452 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 345 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 95.51 சதவீதம் பேரும் மாணவிகள் 98.89 சதவீதம் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். சராசரியாக 97.21 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகமானோர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி விழுக்காட்டை பொறுத்தமட்டில் 10ம் வகுப்பு தேர்வில் குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் குமரி மாவட்டம் 98.08 சதவீதம் பெற்று 2-வது இடம் பிடித்து இருந்த நிலையில் தற்போது முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நடைபெறவில்லை.

குமரி மாவட்டம் ஏற்கனவே மாநில அளவில் கல்வி அறிவு நிறைந்த மாவட்டம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மாநில அளவில் சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த பள்ளி ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். கடந்த 2019-ம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் கிடைக்கப் பெற்ற தேர்ச்சி விழுக்காட்டை விட இந்த கல்வியாணடில் தேர்ச்சி விழுக்காடு குறைந்து இருந்தாலும் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2012 ஆம் கல்வி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் முதல் இடம் பிடித்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
Embed widget