TN 11th Govt Schools: பிளஸ் 1 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 241 அரசுப் பள்ளிகள்! தேர்ச்சி விகிதத்தில் 'அப்ளாஸ்'
Tamil Nadu 11th Result 2024: 11ஆம் வகுப்பில் 1964 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 241 அரசுப் பள்ளிகள் முழுத் தேர்ச்சியை உறுதி செய்துள்ளன.
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 85.75 ஆக உள்ளது. தனியார் பள்ளிகளில் 98.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் 92.36 சதவீதம் பேர் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இருபாலர் பள்ளிகளில் 91.61 % பேரும் பெண்கள் பள்ளிகளில், 94.46% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் ஆண்கள் பள்ளியில் தேர்ச்சி வீதம் 81.37 எனக் குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்ச்சி 91.17 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.24 சதவீதம் அதிகம் ஆகும். 2023ஆம் ஆண்டு, 90.93 சதவீதம் பேர் பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
100 சதவீதத் தேர்ச்சி
11ஆம் வகுப்பில் 1964 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 241 அரசுப் பள்ளிகள் முழுத் தேர்ச்சியை உறுதி செய்துள்ளன.
அதேபோல, அரசுப் பள்ளிகளில் ஈரோடு 92.86 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளிகள் 92.59 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், 92.06 சதவீத அரசுப் பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன.
மாணவர்கள், http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம்.