மேலும் அறிய

TAHDCO Free Courses: பள்ளி தேர்ச்சி போதும்; இலவச பட்டப் படிப்பு; வேலை உறுதி- எங்கே, என்னென்ன படிப்புகள்? விண்ணப்பிப்பது எப்படி? 

10, 12ஆம் வகுப்பை முடித்தவர்கள், இலவசமாகப் பட்டப் படிப்பை முடிக்கவும், ரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்யவும் தாட்கோ முன்வந்துள்ளது.

10, 12ஆம் வகுப்பை முடித்தவர்கள், இலவசமாகப் பட்டப் படிப்பை முடிக்கவும், ரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்யவும் தாட்கோ முன்வந்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்‌நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம், தாட்கோ என்று அழைக்கப்படுகிறது. தாட்கோ தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசின் மூலமாகச் செய்து வருகிறது. தாட்கோ மூலம் பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு முடித்த ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ இனத்தைச்‌ சார்ந்தவர்களுக்கு பிஎஸ்சி படிப்பு கற்பிக்கப்பட உள்ளது.

என்னென்ன படிப்புகள்?

ஆர்வமுள்ள நபர்கள், 3 வருட முழு நேர பட்டப் படிப்பு மற்றும்‌ பட்டயப் படிப்புகளில்‌ சேர்ந்து படிக்கலாம்‌. குறிப்பாக,

* B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு, 
* ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப்‌ படிப்பு, 
* பத்தாம்‌ வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும்‌ பதனிடுதல்‌ கைவினைஞர்‌ படிப்பு(Craftmanship Course in Food Production) * * Craftmanship Course in Food Production & Patisserie n & Patisserie), 
* உணவு மற்றும்‌ பானசேவையில்‌ கைவினைத்திறன் படிப்பு (Craftmanship Course in Food  Beverage Service ), 
* பேக்கரி மற்றும்‌ மிட்டாய்‌ துறையில்‌ பட்டயப்படிப்பு, (Diploma in Bakery Diploma in Bakery & Confectionary), 
* முன்‌ அலுவலக செயல்பாட்டில்‌ பட்டயப்படிப்பு, (Diploma in Housekeeping Operation), 
* ஹவுஸ்‌ கீப்பிங்‌ செயல்பாட்டில்‌ பட்டயப்படிப்பு, 
* உணவு முறை மற்றும்‌ உணவு சேவை முதுகலை பட்டயப்படிப்பு (Graduate Diploma in Dietetics & Hospital Food Service Post Graduate) , 
* விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பு (Post Graduate Diploma in Accommodation Operation & Management)  ஆகியவற்றில் சேர்ந்து படிக்கலாம்.

எங்கு?

சென்னை தரமணியில் உள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ஐஎஸ்ஓ தரச்‌ சான்று பெற்ற நிறுவனமாகும்‌. இந்நிறுவனமானது ஒன்றிய அரசின்‌ சுற்றுலாத் துறையின்‌ கீழ்‌ அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம் மற்றும்‌ சர்வதேச அங்கீகாரம்‌ பெற்றதாகும். அமெரிக்க வணிக கவுன்சிலாலும் இந்த நிறுவனம்‌ (Amercian Council of Business)‌ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புகழ்‌ பெற்ற இந்நிறுவனத்தில்‌ பிஎஸ்சி படிப்பு கற்பிக்கப்பட உள்ளது.

படிப்பு முடிந்தவுடன்‌ நட்சத்திர விடுதிகள்‌, விமானம்‌ நிறுவனம்‌, கப்பல்‌ நிறுவனம்‌, சேவை நிறுவனங்கள்‌ மற்றும்‌ உயர்‌ தர உணவகங்கள்‌ போன்ற இடங்களில்‌ வேலை வாய்ப்பும்‌ பெற்று தரப்படும்‌.

என்ன தகுதி?

* இப்படிப்பில் சேர ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தைச்‌ சார்ந்தாவராக இருக்க வேண்டும்‌. 
* 10ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பில்‌ குறைந்தது45 சதவீதம்‌ மதிப்பெண்‌ பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. 
* குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.3 லட்சத்திற்குள்‌ இருக்க வேண்டும்‌. 
* இப்படிப்பிற்கான செலவீனம்‌ தாட்கோவால்‌ ஏற்கப்படும்‌.

ஊதியம் எவ்வளவு?

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல்‌ ரூ.35,000/- வரை பெறலாம்‌. இத்திட்டத்தில்‌ பதிவு செய்வதற்கு தாட்கோ இணைதளம்‌ www.tahdco.com என்ற முகவரியில்‌ பதிவு செய்ய வேண்டும்‌.

முழுமையான தகவல்களுக்கு: http://iei.tahdco.com/htmgt_reg.php என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

இதையும் வாசிக்கலாம்: TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Top 10 News Headlines: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ், நிராகரித்த குடியரசு தலைவர், ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ், நிராகரித்த குடியரசு தலைவர், ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Top 10 News Headlines: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ், நிராகரித்த குடியரசு தலைவர், ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ், நிராகரித்த குடியரசு தலைவர், ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Gold Rate Dec.16th: கொஞ்சமாச்சும் கருணை காட்டுனியே.! சவரனுக்கு ரூ.1,320 குறைந்த தங்கத்தின் விலை - இன்றைய விலை என்ன.?
கொஞ்சமாச்சும் கருணை காட்டுனியே.! சவரனுக்கு ரூ.1,320 குறைந்த தங்கத்தின் விலை - இன்றைய விலை என்ன.?
Tamilnadu Roundup: தவெக பிரமாண பத்திரம், பள்ளிகளுக்கு 12 நாள் அரையாண்டு விடுமுறை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
தவெக பிரமாண பத்திரம், பள்ளிகளுக்கு 12 நாள் அரையாண்டு விடுமுறை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Ukraine Hits Russia: ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Embed widget