மேலும் அறிய

SET Exam: ஆண்டுக்கு 2 முறை மாநிலத் தகுதித் தேர்வு; தேர்வை நடத்த புதிய அமைப்பு- அன்புமணி வலியுறுத்தல்

உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பதால் ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பதால் ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயமல்ல, விருப்பத் தகுதியாகவே இருக்கும்; அதேநேரத்தில் தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test - NET), மாநிலத் தகுதித் தேர்வுகள் (State Eligibility Test -SET) ஆகியவற்றில் ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருக்கிறது.   

முனைவர் பட்டம் பெறுவதில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்திருக்கிறது. ஆனாலும்  கூட,  முனைவர் பட்டம் பெற்றதால் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்ந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புகளை இந்த முடிவு கடுமையாக பாதிக்கும்.

அதேநேரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பேராசிரியர்கள் நியமனத்திற்கான வழிகாட்டுதல் விதிமுறை எண் 3.3.1இன் படி முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு தகுதித் தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதி தொடருவதால் முனைவர் பட்டம் பெற்றவர்களை நேரடியாக நியமனம் செய்யலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இது சரியானதா? என்பதை யு.ஜி.சி விளக்க வேண்டும்.

2018-ல் தகுதித் தேர்வு

தமிழ்நாட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டுதான் கடைசியாக கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தால் உதவிப் பேராசிரியர் பணிக்கான தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு (Tamil Nadu State Eligibility Test -TNSET)  நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த ஐந்தாண்டுகளாக  தகுதித் தேர்வே நடத்தப்படவில்லை. அதனால், கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய தகுதித்தேர்வு எழுதி  வெற்றி பெற்ற ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றிருக்க மாட்டார்கள். அதேநேரத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறும் நோக்குடன் கடந்த ஐந்தாண்டுகளில் முனைவர் பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்புக்கான தகுதியை இழந்து விடுவர். 

தமிழ்நாட்டில் விரைவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதற்கான அறிவிக்கை எந்த நேரமும் வெளியாகும்; அதன்வழியாக தமிழக அரசு கல்லூரிகளில்  உதவிப் பேராசிரியர் பணிக்கு சென்று விடலாம் என்று முனைவர் பட்டம்  பெற்ற பலர் எண்ணிக் கொண்டிருந்தனர். முனைவர் பட்டம் தகுதியல்ல... தகுதித் தேர்வில் வெற்றிதான் தகுதி என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவு அவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பின்னடைவு

2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் வரை உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் தகுதியானவர்கள்; ஜூலை ஒன்றாம் தேதிக்கு பிறகு தகுதியற்றவர்கள் என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. தமிழ்நாட்டில் அடுத்து எப்போது தகுதித் தேர்வு நடத்தப்படும் என்பது யாருக்கும் தெரியாது; எத்தனையாவது முயற்சியில் வெற்றி பெற முடியும் என்பதும் தெரியாது. அதனால், முனைவர் பட்டம் பெற்று உதவிப் பேராசிரியர் பணிக்கு கடந்த மாதம் வரை தகுதியானவர்களாக இருந்தவர்கள், மீண்டும் அந்தத் தகுதியைப் பெறுவதற்கு ஐந்தாண்டுகள் வரை போராட வேண்டியிருக்கும். அது அவர்களின் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவால் தகுதியிழந்த முனைவர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கப்படவேண்டும். 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை முனைவர் பட்டம் பெற்றவர்கள் உதவிப்  பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள்; 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு முனைவர் பட்டம் பெற்றவர்கள் தகுதித் தேர்வு எழுதிதான் உதவிப் பேராசிரியர் ஆக முடியும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவிக்க வேண்டும். கடந்த காலங்களில் தகுதித் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட போது இவ்வாறு அறிவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன. இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடமும், பல்கலைக்கழக மானியக்குழுவிடமும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதுதான் சமூகநீதியாகும்.

 குறைந்தது ஆண்டுக்கு இருமுறை

அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை தமிழக அரசு குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது நடத்த வேண்டும். தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் போது, மாநில அளவிலான தகுதித் தேர்வும் ஆண்டுக்கு இரு முறையாவது நடத்தப் பட்டால்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமவாய்ப்பும், சமூக நீதியும் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் இப்போது மாநில பல்கலைக்கழகங்கள் வாயிலாக தகுதித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அத்தேர்வுகள் நடத்தப்படும் விதம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அத்தகைய குற்றச்சாட்டுகளைப் போக்கும் வகையில், தேசியத் தகுதித் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவதைப் போன்று தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த புதிய அமைப்பை தமிழக அரசு நிறுவ வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாதம் ரூ.40,000 உதவித்தொகை; பிஎச்.டி, எம்எஸ் படிப்புகளில் சேர்வது எப்படி? அண்ணா பல்கலை அழைப்பு
மாதம் ரூ.40,000 உதவித்தொகை; பிஎச்.டி, எம்எஸ் படிப்புகளில் சேர்வது எப்படி? அண்ணா பல்கலை அழைப்பு
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்
MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Israel War:
Iran Israel War: "ஈரான் போரை ஆதரிக்க முடியாது.." அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு இயக்குனர் ராஜினாமா ! அதிர்ச்சியில் ட்ரம்ப்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. சென்னையில் களமிறங்கப்போகும் தவெக தலைவர்கள் லிஸ்ட்!
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. சென்னையில் களமிறங்கப்போகும் தவெக தலைவர்கள் லிஸ்ட்!
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Demonte Colony 3: டிமான்டி காலனி 3 லைப்ரேரியன் வேடத்தில் இவரா? செம ட்ரீட் இருக்கு!
Demonte Colony 3: டிமான்டி காலனி 3 லைப்ரேரியன் வேடத்தில் இவரா? செம ட்ரீட் இருக்கு!
ஒருவழியாக கருப்பு படத்தை வாங்க முன்வந்த ஓடிடி நிறுவனம்..எத்தனை கோடிக்கு தெரியுமா?
ஒருவழியாக கருப்பு படத்தை வாங்க முன்வந்த ஓடிடி நிறுவனம்..எத்தனை கோடிக்கு தெரியுமா?
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Embed widget