(Source: ECI/ABP News/ABP Majha)
AzaadiSAT: 750 அரசுப்பள்ளி மாணவிகள் சேர்ந்து உருவாக்கிய AzaadiSAT செயற்கைக்கோள்; விண்ணில் ஏவும் இஸ்ரோ..
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 75 அரசுப் பள்ளிகளில் இருந்து 750 மாணவிகள் இணைந்து ஆசாதிசாட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர்.
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 75 அரசுப் பள்ளிகளில் இருந்து 750 மாணவிகள் இணைந்து ஆசாதிசாட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். இந்த மைக்ரோசாட் நாளை (ஆகஸ்ட் 7ஆம் தேதி) விண்ணில் ஏவப்படுகிறது.
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் 75 அரசுப் பள்ளிகளில் இருந்து 750 மாணவிகள் இணைந்து ஆசாதிசாட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். இந்த மைக்ரோசாட் நாளை (ஆகஸ்ட் 7ஆம் தேதி) விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ அனுப்பும் SSLV-D1-EOS 2 செயற்கைக்கோளுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அனுப்பும் ஆசாதிசாட் (AZAADISAT) மைக்ரோசாட் செயற்கக்கோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ஆனையூர் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் கருணைதாஸ் ஏபிபி நாடுவிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, நாடு முழுவதும் 75 அரசுப்பள்ளி மாணவிகள் 750 பேர் இணைந்து ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன் இணைந்து செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள பெண் மாணவர்களின் பல்வேறு குழுக்களால் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளுக்கு ஆசாதிசாட் (AzaadiSAT) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆசாதிசாட் நாளை (7.8.2022) அன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விண்வெளி சார்ந்த பெண்களின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதாக இந்த நிகழ்வு அமையும்.
75 ஃபெம்டோ சோதனைகளைக் கொண்டு ஆசாதிசாட் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இது சுமார் 8 கிலோ எடையுள்ள மைக்ரோசாட் ஆகும். இது கிராமப்புற இந்தியாவில், முக்கியமாகப் பெண்கள் மத்தியில் விண்வெளி பற்றிய விழிப்புணர்வை உருவாக்க உதவுகிறது.
விண்வெளியில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து கோடிங் எழுதி, செயற்கைக் கோளில் பதிவேற்றம் செய்துள்ளோம். 750 அரசுப் பள்ளி மாணவிகள் வாட்ஸ் அப் மூலம் ஒணைந்து உருவாக்கிய 75 ஃபெம்டோ பலகைகள் ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன. இவற்றை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் மாணவர் பொறியாளர்கள் சேர்ந்து, ஒருங்கிணைத்தனர் என்று ஆசிரியர் கருணைதாஸ் தெரிவித்தார்.
8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் ஆசாதிசாட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். முன்னதாக மான் - கி- பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆசாதிசாட் குறித்துக் குறிப்பிட்டுப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்