iQOO Chief Gaming Officer: மாதம் ரூ.10 லட்சம் ஊதியம்; பிரபல சீன நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக 23 வயது இந்திய இளைஞர் நியமனம்!
கான்பூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஸ்வேதங்க் பாண்டே, பிரபல சீன ஸ்மார்ட் போன் நிறுவனத்தின் தலைமை கேமிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கான்பூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஸ்வேதங்க் பாண்டே, பிரபல சீன ஸ்மார்ட் போன் நிறுவனத்தின் தலைமை கேமிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மாதம் ரூ.10 லட்சம் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனம் iQOO. இந்நிறுவனம் சார்பில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் தலைமை கேமிங் அதிகாரிக்கான வேலையை அண்மையில் அறிவித்தது.
சுமார் 60 ஆயிரம் பேர் கலந்துகொண்ட தேர்வில், 3 மாத கடுமையான செயல்முறைகளுக்குப் பிறகு ஸ்வேதங்க் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேமிங் ஈடுபாடு மற்றும் அனுபவத்தை மறுவரையறை செய்வதே, தலைமை கேமிங் அதிகாரியின் முக்கியப் பணியாக இருக்கும். கேமிங் கட்டளைகள், கேமிங் குறித்தான அறிவு, தொலைதொடர்பு திறன்கள் சார்ந்து ஸ்வேதங்க்கின் பணி இருக்கும்.
உத்தரப் பிரதேசம், கான்பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்வேதங்க் பாண்டே. இவருக்கு ஏற்கனவே நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தது. கேமிங் துறையில் எம்பிஏ படிக்கும் வாய்ப்பையும் iQOO சீன நிறுவனத்துக்காக விட்டுள்ளார்.
மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பளம்
Drumrolls🥁Introducing our very first #ChiefGamingOfficer! 🎮
— iQOO India (@IqooInd) August 16, 2023
Congratulations to Shwetank Pandey on becoming a part of the #iQOO fam! 🤩 pic.twitter.com/GxNib8o2Oe
iQOO நிறுவனத்தில் முதல்முறையாக தலைமை கேமிங் அதிகாரி பதவி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக ஸ்வேதங்க் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்வேதங்க் பாண்டேவுக்கு 6 மாதங்களுக்கு மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளது. பணியின் முக்கியப் பகுதியாக இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுடன் ஸ்வேதங்க் பாண்டே பணியாற்ற உள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: 10th Original Certificate: மாணவர்களே தயாரா? இன்று முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: பெறுவது எப்படி?
இந்தியர்களின் இமாலய சாதனைகள்
உலகத்தையே தன் கைக்குள் வைத்திருக்கும் சில முக்கிய நிறுவனங்களை தன் கைக்குள் வைத்திருக்கிறார்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவ திறனாளர்கள் சிலர். Google, Microsoft, IBM , Adobe, VMWare என முக்கிய பன்னாட்டு நிறுவனங்களில் இந்தியர்கள் இருந்த பட்டியலில் Twitter நிறுவனமும் இணைந்தது. பின்னர் பாரக் அக்ரவால் ட்விட்டர் பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் தற்போது கான்பூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஸ்வேதங்க் பாண்டே, பிரபல சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான iQOO-வின் தலைமை கேமிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மாதம் ரூ.10 லட்சம் ஊதியம் வழங்கப்பட உள்ளது.