மேலும் அறிய

6 மாதங்கள் ஆகியும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படாத சீருடை, புத்தகங்கள்: எழும் கண்டனம்

குழந்தைகளின் சிந்தனைத் திறனைத் தூண்டும் எந்தப் பயிற்சிகளும் வழங்கப்படாததால், இது குழந்தைகளின் கற்றல் திறனையும் பாதிக்கும்- அண்ணாமலை.

கல்வியாண்டு தொடங்கி 6 மாதம் ஆகியும் பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்கப்படாததாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 54,000 அங்கன்வாடி மையங்களில், சுமார் 18,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’கல்வி ஆண்டு தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியும், தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பள்ளிக் குழந்தைகளுக்கான சீருடைகளும், பயிற்சிப் புத்தகங்களும் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.

அங்கன்வாடி பள்ளிகளின் நோக்கமே, பள்ளிக் கல்வி தொடங்கும் முன், குழந்தைகள், முறையான அடிப்படைக் கல்வி பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வரையில், அங்கன்வாடி குழந்தைகள், பயிற்சி புத்தகங்களில் உள்ள, காய்கறிகளின் பெயர்கள், விடுபட்ட எழுத்துக்கள், படம் வரைதல் உள்ளிட்ட பயிற்சிகளில் தேர்ந்திருக்க வேண்டும்.   

எந்த அடிப்படைப் பயிற்சியும் கிடைக்கவில்லை

ஆனால், ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் பயிற்சி புத்தகங்களே வழங்கப்படாததால், குழந்தைகளுக்கு எந்த அடிப்படைப் பயிற்சியும் கிடைக்கவில்லை. குழந்தைகளின் சிந்தனைத் திறனைத் தூண்டும் எந்தப் பயிற்சிகளும் வழங்கப்படாததால், இது குழந்தைகளின் கற்றல் திறனையும் பாதிக்கும்.

அது மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சுமார் 54,000 அங்கன்வாடி மையங்களில், சுமார் 18,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், இதனால், பணியாளர்கள், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று மையங்களைக் கவனித்துக் கொள்ள நேர்வதாகவும் கூறப்படுகிறது.

ஊழியர்கள் மீது பணிச் சுமை

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும், அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

ஆட்சிக்கு வந்து 44 மாதங்கள் ஆகியும், இது குறித்து திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதோடு, காலி பணியிடங்களை நிரப்பாமல், ஊழியர்கள் மீது பணிச் சுமையைத் திணித்துக் கொண்டிருக்கிறது.

கற்றலில் குழந்தைகள் பின்தங்கவும் வாய்ப்பு

ஏழை, எளிய பின்புலத்தில் இருந்து வரும் குழந்தைகள், அடிப்படைக் கல்வியும், சிந்தனைத் திறனும் பெற வேண்டும். கல்வியில் சமவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டவை அங்கன்வாடி மையங்கள். இந்த அடிப்படைப் பயிற்சி கிடைக்கவில்லை என்றால், பள்ளிக் கல்வி கற்றலில் குழந்தைகள் பின்தங்கவும் வாய்ப்பு இருக்கிறது’’.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget