மேலும் அறிய
Advertisement
ஒரே பள்ளியில் படித்த 3 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் சீட்; புதுக்கோட்டையில் ஆண்டுதோறும் அசத்தும் அரசுப் பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 3 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
2023-2024ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல் கடந்த 16ஆம் தேதி வெளியானது. அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,856 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,179 பேர் மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 2,993 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 6 ஆயிரத்து 326 இளநிலை மருத்துவம் எனப்படும் எம்பிபிஎஸ் இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் சேர்ந்து ஆயிரத்து 768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடங்கிய காலத்திலிருந்து அதிக மதிப்பெண் பெற்று பல மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் படித்து தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் டாக்டர்களாக உள்ளனர். இதேபோல பொறியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என பல துறைகளிலும் பணிகளில் உள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு தொடங்கிய பிறகு தமிழ்நாடு அரசால் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே மாணவிகள் 4 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகிறார்கள். அதே போல அடுத்த ஆண்டு 7 மாணவிகளும் கடந்த ஆண்டு ஒரு மாணவியும் தேர்ச்சி பெற்று கடந்த 3 ஆண்டுகளில் 12 மாணவிகள் மருத்துவம் படித்து வருகின்றனர். அதேபோல இந்த ஆண்டும் ஏராளமான மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் நேற்று நடந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டிற்கான மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் 457 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சுருதி மதுரை அரசுப்பள்ளி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கவும், 418 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜனனி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கவும், 375 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சுபதாரணிக்கு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கவும் இடம் கிடைத்துள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion