மேலும் அறிய

புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம்!

புதுச்சேரி : தலைமை செயலகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கல்விதுறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு செயலாளர்கள் அருண், வல்லவன், கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், மாநில சுகாதார திட்ட இயக்குனர் ஸ்ரீராமுலு, கொரோனா பொறுப்பு அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, கொரோனா 3-வது அலை வரக்கூடும் என்பதால் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.


புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம்!

 

அதன் பின் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது;-

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கொரோனா 3-வது அலை எப்போது வரும் என்று தெரியாத சூழ்நிலையில், தற்போது 3 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள், 10 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். இதுவரை 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். முதலில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்,  ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தற்போதைய நிலையில் 85 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போடாதவர்களுக்காக வருகிற 11, 12, 13-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

 


புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம்!

 

 

பின்னர் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக வரும் 15-ந் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். ஏனெனில் 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்கிறார்கள். தற்போது கொரோன தாக்ககம் படிபடியாக குறையா தொடங்கிஉள்ளது,  3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால்  இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது.  இதற்காக தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதையும் மீறி கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க குழு அமைக்கப்படும். கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிக்க தனியாக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என கல்வி துறை  அமைச்சர் நமச்சிவாயம் அவர் கூறினார்.

சுவரை உடைக்க சத்து இல்லாமல் பாதியில் சென்ற திருடர்கள்; வங்கி லாக்கர் தப்பியது!

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Embed widget