மேலும் அறிய

Puducherry School Colleges Holiday : மோன்தா புயல் எதிரொலி ; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!

மோன்தா புயல் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி : மோன்தா புயல் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதேவேளை வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மோந்தா புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மறுதினம் இரவு ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மோந்தா புயல் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 29ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் காக்கிநாடா அருகே ஏனாம் அமைந்துள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றே உருவாகும் மோன்தா புயல்:

இந்த நிலையில், நாளை உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மோன்தா புயல் இன்றே உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து தற்போது 790 கி.மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 

ஆந்திரா நோக்கி மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் தற்போது நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று மாலை 5 மணிக்கு மேல் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோன்தா புயல் ஆந்திராவின் மசிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது. 

நேற்று காலை 5.30 மணிக்கு வங்க்கடலின் தென்கிழக்கில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காலை 5.30 மணிக்கு மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

110 கி.மீட்டர் வேகத்தில் காற்று:

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பிறகு இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த மோன்தா புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயல் காரணமாக மணிக்கு 90 கி.மீட்டர் முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் கற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் 110 கி.மீட்டர் வேகத்தில்கூட காற்று வீசும் வாய்ப்பும் உள்ளது. 

மோன்தா புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை  மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  சென்னையைப் பொறுத்தமட்டில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது.

மோன்தா புயல் உருவாக உள்ள சூழலில் அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதியில் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகர உள்ளது. இதனால், கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

மோன்தா புயல் காரணமாக அதிக பாதிப்புகளை ஆந்திராவே எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், புயல் கரையை கடக்கும் பகுதியாக கணிக்கப்பட்டுள்ள காக்கிநாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், ஒடிசாவிலும் ஓரளவு மழை பாதிப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆந்திராவில் மோன்தா புயல் காரணமாக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள இடங்களில் நிவாரண முகாம்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மீட்புப்படையினர், மருத்துவ குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த மோன்தா புயல் காரணமாக பாதிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget