மேலும் அறிய

Private School Fees: தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம் - உயர்நீதிமன்றம்

கட்டண சலுகை குறித்து பரிசீலிக்கப்படும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் நீக்கப்படமாட்டார்கள் என்று தனியார் பள்ளிகள் கூறியது

நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்ததை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீதம் கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம். வருமானம் பாதிக்கப்படாதவர்கள் 85 சதவீதத்தில் இருந்து முதல் தவணையை செலுத்த வேண்டும். மற்ற தவணைகளை 2022 பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் தொடர முடியாத மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு RTE  சட்டத்தில் நிரப்பப்படாத இடங்களை ஒதுக்க அரசு பரிசீலிக்கலாம். வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் 75 சதவீதம் செலுத்த வேண்டும்; மற்ற தவணைகளை 2022 பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்’ என்று நீதிபதி கிருஷ்ண குமார் உத்தரவிட்டார்.

மேலும், வருமானம் இல்லாதவர்கள் கட்டணக் குறைப்பு கேட்டு பள்ளியை நாடலாம் என்றும், கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக ஆன்லைன் கல்வி பெறுவது அல்லது பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தக்கூடாது என்றும், புகார் வந்தால் தீவிரமாக ஆராய்ந்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது, 

இதற்கு, கட்டண சலுகை குறித்து பரிசீலிக்கப்படும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் நீக்கப்படமாட்டார்கள் என்று தனியார் பள்ளிகள் கூறியது. இதனைத் தொடர்ந்து, பள்ளி கட்டணம் தொடர்பான வழக்கை முடித்து நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget