மேலும் அறிய

Ponmudi on College Fees: அதிக கட்டணம் வசூல்? தனியார் கல்லூரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் துவங்கப்பட்ட பல்கலைக்கழகம் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே துவங்கப்பட்டுள்ளது- அமைச்சர் பொன்முடி.

கல்வியியல் ஆசிரியர் கல்வி (பி.எட்)  பயில ஆண்டு கட்டணம்  30 ஆயிரம் ரூபாய் என தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் துவங்கப்பட்ட பல்கலைக்கழகம் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே துவங்கப்பட்டுள்ளது. துணைவேந்தர், உதவியாளர், டிரைவர் மற்றும் வாட்ச்மேன் என நான்கு பேர் மட்டுமே இதுவரை பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதியே அதனை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் சகோதரி முறைகேடாக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய இயலாத மாணவர்கள் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வியியல் ஆசிரியர் கல்வி (பி.எட்)  பயில ஆண்டு கட்டணம்  30 ஆயிரம் ரூபாய் என தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நெருக்கடி முடிந்த பிறகு முதலமைச்சருடன் கலந்து பேசி கல்லூரி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.


Ponmudi on College Fees: அதிக கட்டணம் வசூல்? தனியார் கல்லூரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.org மற்றும்  www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான இந்த விண்ணப்ப பதிவு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 48ம், பதிவுக் கட்டணமாக ரூபாய் 2ம் என்று மொத்தம் ரூபாய் 50 செலுத்த வேண்டும். இதில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் தேவையில்லை. பதிவு கட்டணமாக ரூபாய் 2 செலுத்தினால் போதுமானது. இந்த கட்டணத்தை விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையம் மூலமாக செலுத்தினால் போதும். அவ்வாறு செலுத்த முடியாத மாணவர்கள் தங்களுக்கான உதவி மையங்கள் மூலமாக the director, directorate of collegiate education, Chennai- 6 என்ற பெயரில் இன்றைய தேதி அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பெற்ற வங்கி வரைவோலையாகவோ அல்லது நேரடியாக செலுத்தலாம்.

மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 044-28260098, 044-28271911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்..!

தலைப்பு செய்திகள்

பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget