Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூரில் அணையில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார் முதல்வர் விஜய். இதற்காக காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் பொதுமக்களும் தமிழக வெற்றிக் கழகத்தினரும் உற்சாக வரவேற்பு அளித்தவர். திறந்த வாகனத்தில் நின்றுகொண்டே பொதுமக்களுக்கு கைக்காட்டியும் வணக்கம் செலுத்தியும் சென்ற முதல்வர் விஜய், மேட்டூர் அணைக்கு சென்று பூக்களை தூவி மேட்டூர் அணையின் மதகுகளை திறந்து வைத்தார்.
கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்
மேட்டூர் அணையை திறப்பதற்கு முன்னர் காவிரி நீரை பார்த்து கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய், தண்ணீரில் பூக்களை தூவி வரவேற்றார். வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், போதிய தண்ணீரை கர்நாடகா வழங்காத நிலையில், இரண்டு மாதம் கழித்து மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)ட்ரெண்டிங் செய்திகள்






















