மேலும் அறிய

மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்: நடப்பாண்டில் மீண்டும் தொடங்குக- அன்புமணி வலியுறுத்தல் 

தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட  தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடப்பாண்டில் மீண்டும் தொடங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார். 

தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட  தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடப்பாண்டில் மீண்டும் தொடங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

’’தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்று காரணம் காட்டி, மேல்நிலை வகுப்புகளில் செயல்பட்டு வந்த தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் பெரும்பாலானவை கடந்த ஆண்டு மூடப்பட்டன.  அதிலும் கடந்த ஆண்டு 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை முடிந்து  3 மாதங்கள் கழித்து நிறுத்தப்பட்டன.

தொழிற்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் வேறு பிரிவுகளில் சேர்க்கப்பட்டனர். கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் இப்போது தேர்ச்சி பெற்று சென்று விட்டதால் அப்பாடப்பிரிவுகள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. இது பெரும் சமூக அநீதி ஆகும்.

பயிற்சியை அடிப்படையாகக் கொண்டவை

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தொழிற்கல்வி பாடப்பிரிவில் பொறியியல், வேளாண்மை, கணக்குப் பதிவியல், செவிலியர் உள்ளிட்ட 9 வகையான பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டவை. அதனால், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை படித்தவர்கள், தாங்கள் பெற்ற பயிற்சியின் காரணமாக எளிதில் வேலைக்கு செல்ல முடியும்.  

எடுத்துக்காட்டாக  சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1978 முதல் 2010 வரை  பால் பண்ணையியல் என்ற பெயரிலும், அதன்பிறகு வேளாண்மையியல் என்ற பெயரிலும் நடத்தப்பட்டு வந்த தொழிற்கல்வி பாடப்பிரிவால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் பட்டதாரிகளும் உருவாகியுள்ளனர். இதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் நிகழ்த்தியிருக்கின்றன.  அப்பாடப் பிரிவுகளை நீக்கியிருக்கக் கூடாது.

தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுகின்றன. தொழிற்கல்வி பாடப்பிரிவினருக்கு பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன.

பறிக்கப்பட்ட வாய்ப்பு

தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு விட்டதால், கிராமப்புற மாணவர்கள் மிகவும் எளிதாக தொழிற்கல்வி பயிலும் வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒருபுறம் மாணவர்களின் தொழிற்திறனை மேம்படுத்தப்படுத்துவதற்காக நான் முதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தும் தமிழக அரசு, இன்னொரு புறம் அதே பணியை சிறப்பாக செய்து வரும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவது முரண்பாடாக உள்ளது.

தொழிற்கல்வி பாடங்களுக்கான ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டதாகவும், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கூறி தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை அரசு மூடுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பத் தகுதியானவர்கள் உள்ளனர்.

அவர்கள் வேலை கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆசிரியர்கள் இல்லை என்பது நியாயமான காரணம் இல்லை. எனவே,  தொழிற்கல்வி ஆசிரியர்களை அமர்த்தி அவர்களுக்கு வேலை வழங்குவதுடன், மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மீண்டும் திறந்து மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

School Exam Holidays : மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Donald Trump: இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
Iran Warns South Korea: நீங்க அமெரிக்காவ சப்போர்ட் பண்ணா...“ தென் கொரியாவுக்கு ஈரான் எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க.?
நீங்க அமெரிக்காவ சப்போர்ட் பண்ணா...“ தென் கொரியாவுக்கு ஈரான் எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க.?
Embed widget