மேலும் அறிய

OPS: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலா?- அரசு போட்ட முக்கிய உத்தரவு!

பழைய ஓய்வூதியத்‌ திட்டம்‌, பங்களிப்பு ஓய்வூதியத்‌ திட்டம்‌ மற்றும்‌ ஒருங்கிணைந்த ஓய்வூதியத்‌ திட்டம்‌ ஆகிய 3 ஓய்வூதியத்‌ திட்டங்கள்‌ குறித்து ஆராய்ந்திட அரசு ஒரு குழு அமைத்துள்ளது.

மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 01.04.2003 முதல்‌ மாநில அரசுப்‌ பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்‌ திட்டம்‌ அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில்‌ ஒன்றிய அரசுப்‌ பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத்‌ திட்டம்‌ (National Pension System) 01.01.2004 முதல்‌ அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும்‌ மாநில அரசுப்‌ பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத்‌ திட்டமே தொடர அணுமதிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத்‌ திட்டம்‌ 

எனினும்‌ மாநில அரசுப்பணியாளர்கள்‌ 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள்‌ விடுத்து வருகின்றனர்‌. இந்நிலையில்‌, 24.04.2025 அன்று ஒன்றிய அரசுப்‌ பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்‌ திட்டம்‌ குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது,

எனவே, பழைய ஓய்வூதியத்‌ திட்டம்‌, பங்களிப்பு ஓய்வூதியத்‌ திட்டம்‌ மற்றும்‌ ஒருங்கிணைந்த ஓய்வூதியத்‌ திட்டம்‌ ஆகிய மூன்று ஓய்வூதியத்‌ திட்டங்கள்‌ குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின்‌ நிதி நிலையினையும்‌, பணியாளர்களின்‌ ஓய்வூதியக்‌ கோரிக்கைகளையும்‌ கருத்தில்‌ கொண்டு நடைமுறைப்படுத்தத்‌ தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும்‌ அதிகாரிகள்‌ அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

* ககன்தீப் சிங்‌ பேடி, இ.ஆ.ப., கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ உள்ளாட்சித்‌ துறை.

* கே.ஆர்‌.சண்முகம்‌, முன்னாள்‌ இயக்குநர்‌, Madras School of Economics

* பிரத்திக்‌ தாயள்‌, இ.ஆ.ப., துணைச்‌ செயலாளர்‌ (வரவு செலவு), நிதித்‌ துறை, உறுப்பினர்‌ செயலர்‌.

9 மாத அவகாசம்

இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும்‌ பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள்‌ சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குழு கண் துடைப்புக்கா?

எனினும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியக் கோரிக்கையை அமைதிப்படுத்தவே இந்தக் குழு கண் துடைப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

கடந்த காலங்களில் இதுபோன்ற குழுக்கள் ஏராளமாக அமைக்கப்பட்டதாகவும் ஆனால் அவற்றின் பரிந்துரைகள் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளப்பட வில்லை என்றும் அரசு ஊழியர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Top 10 News Headlines: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
Ukraine Putin Trump CIA: ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
Old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Top 10 News Headlines: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
Ukraine Putin Trump CIA: ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
Old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
Heavy Rain Alert: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
Tamilnadu Round Up: தென்காசி, குன்னூரில் கொட்டிய கனமழை, திருச்சியில் முதலமைச்சர், தங்கம் ரூ.1 லட்சம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தென்காசி, குன்னூரில் கொட்டிய கனமழை, திருச்சியில் முதலமைச்சர், தங்கம் ரூ.1 லட்சம் - தமிழ்நாட்டில் இதுவரை
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
Amit Shah again in Tamil Nadu: தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.! களத்தில் இறங்கும் அமித்ஷா- தேதி குறித்த பாஜக
தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.! சபதத்தோடு களத்தில் இறங்கும் அமித்ஷா- தேதி குறித்த பாஜக
Embed widget