மேலும் அறிய

விடுமுறையே இல்லை, தாமத ஊதியம்; தற்காலிக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது?

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றி வரும் இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இருக்காது- ராமதாஸ்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’2013-17 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 2022- 23-ஆம் கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 5,000 பேர் தற்காலிக ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும், முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல் முறையின் படியும் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து மாதிரி வகுப்புகள் எடுத்து இவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பணியில் சேர்ந்த காலகட்டம் கொரோனா காலகட்டத்தின் இறுதி காலம் என்பதால் அப்போது நிலவிய கடினமான நிதி நெருக்கடியின் காரணமாக 5 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் இல்லாமல் கடினமான சூழ்நிலையில் பணியாற்றியுள்ளனர். பணியில் சேர்ந்த நாள் முதல் இன்றைய நாள் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய் ஊதியமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய் ஊதியமும் மதிப்பூதியம் என தரப்படுகிறது.

எந்த விடுப்பும் கிடையாது
 
இவர்கள் கற்றல் பணியை மட்டும் மேற்கொள்ளாமல் அரசின் நலத்திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது, அரசுக்கு நற்பெயர் அளிக்கும் வகையில் மாணவர்களை பண்புள்ளவர்களாகவும், நல்ல மதிப்பெண் எடுப்பவர்களாகவும் உருவாக்குவது போன்ற பணிகளை திறம்பட செய்து வருகின்றனர். மேலும் அனைத்து பணியிடை பயிற்சிகளும் பெற்று கூடுதல் தகுதி பெற்ற ஆசிரியர்களாகவும் உருவெடுத்துள்ளனர். அதேசமயம் இவர்களுக்கு தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்புகள் அளிக்கப்படுவதில்லை. இதனால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.

ஆனாலும் இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் முறையே மாதாமாதம் வழங்கப்படுவதில்லை. 5 மாதம், 3 மாதம், 2 மாதம் என காலம் கடந்துதான் வழங்கப்படுகிறது. இந்த குறைவான சம்பளத்தை கூட மாதாமாதம் முறையாக வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவதால் இந்த ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள இவர்களது குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர். 
 

எந்த சட்ட சிக்கலும் இல்லை


ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றி வரும் இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இருக்காது.

எனவே, கல்வித்துறை மூலம் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் 4 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அல்லது அரசுக்கு நிதி நெருக்கடி இருக்குமாயின் பதிவு மூப்பு அடிப்படையில், ஊதியத்தை உயர்த்தி தொகுதிப்பூதியமாக வழங்கி  இவர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

கோரிக்கைகளை நிறைவேற்றுக
 
அதுபோலவே ஓராண்டு முதல் நான்கு ஆண்டு வரை தற்காலிக ஆசிரியராக பணியாற்றி பணி வாய்ப்பு இழந்தவர்களுக்கும் நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்ததைப் போல இவர்களுக்கும் மே மாத ஊதியம் 15,000 ரூபாய் வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய தற்செயல் மற்றும் மருத்துவ விடுப்புகள் வழங்கப்பட வேண்டும்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கல்லூரி சேரப்போறீங்களா? முன்னாள் படைவீரர் குழந்தைகளே மிஸ் பண்ணிடாதீங்க.. ஆட்சியர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
கல்லூரி சேரப்போறீங்களா? முன்னாள் படைவீரர் குழந்தைகளே மிஸ் பண்ணிடாதீங்க.. ஆட்சியர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
IIT Madras: ஐஐடி சென்னையில் பிஎஸ் பட்டப்படிப்புகள்; மே 31 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
IIT Madras: ஐஐடி சென்னையில் பிஎஸ் பட்டப்படிப்புகள்; மே 31 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
TN 12th Result 2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர்தான் முதல் மதிப்பெண்!
TN 12th Result 2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர்தான் முதல் மதிப்பெண்!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!
இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!
ADMK support TVK : தவெக ஆட்சிக்கு அதிமுக முழு ஆதரவு.! பாஜகவுடன் கூட்டணி இல்லை- சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு
தவெக ஆட்சிக்கு அதிமுக முழு ஆதரவு.! பாஜகவுடன் கூட்டணி இல்லை- சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
CM Vijay: ADMK-வின் 30 MLA-க்கள் ஆதரவு..! CM விஜய் ஏற்பாரா? தவெகவின் நிலையான ஆட்சி? முரண்பாடான கூட்டணி?
ADMK-வின் 30 MLA-க்கள் ஆதரவு..! CM விஜய் ஏற்பாரா? தவெகவின் நிலையான ஆட்சி? முரண்பாடான கூட்டணி?
Tamilnadu Round Up: சபாநாயகர் பதவியேற்பு, எகிறிய தங்கம் விலை, உயர்நீதிமன்றம் தீர்ப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: சபாநாயகர் பதவியேற்பு, எகிறிய தங்கம் விலை, உயர்நீதிமன்றம் தீர்ப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
Skoda Kodiaq: நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் - எப்படி இருக்கு?
நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் - எப்படி இருக்கு?
MK Stalin: வெறும் 87 ஓட்டு வாங்கிய மு.க.ஸ்டாலின்.. தோற்ற காரணம் இதுதானா? - சம்பவம் செய்த கொளத்தூர் மக்கள்!
MK Stalin: வெறும் 87 ஓட்டு வாங்கிய மு.க.ஸ்டாலின்.. தோற்ற காரணம் இதுதானா? - சம்பவம் செய்த கொளத்தூர் மக்கள்!
Embed widget