மேலும் அறிய

NIFT 2024: ஃபேஷன் டிசைனிங் சேர்க்கை; நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10, 12ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஃபேஷன் டிசைனிங் படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நிஃப்ட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 3ஆம் தேதி கடைசி ஆகும். 

நிஃப்ட் தேர்வு

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் நிஃப்ட் எனப்படும் தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் அணிகலன் வடிவமைப்பு, ஃபேஷன் கம்யூனிகேஷன், ஃபேஷன் வடிவமைப்பு, பின்னலாடை வடிவமைப்பு, தோல் வடிவமைப்பு மற்றும் ஜவுளி வடிவமைப்பு உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளைக் கற்பிக்கின்றன.

அதேபோல, முதுகலை வடிவமைப்புத் திட்டங்களும் (MDes) கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதுகலை ஃபேஷன் மேலாண்மை (MFM), முதுகலை ஃபேஷன் தொழில்நுட்பம் (MFTech) உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன.

என்ன தகுதி?

IFT 2024 Eligibility Criteria: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10, 12ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு அதிகபட்சம்  ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதேபோல நிஃப்ட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியதும் அவசியம்.

தேர்வு முறை எப்படி?

நிஃப்ட் நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு ரூ.3,000 விண்ணப்பக் கட்டணமாகும். எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ரூ.1500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, டிசைனிங் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி ஆகிய இரு படிப்புகளுக்கும் (BDes, BFTech) விண்ணப்பிக்க ரூ.4,500 விண்ணப்பக் கட்டணம் ஆகும். இதுவே எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் nift.ac.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஜனவரி 3ஆம் தேதி கடைசித் தேதியாகும்.

தேர்வு எப்போது?

பிப்ரவரி 5ஆம் தேதி அன்று நிஃப்ட் 2024-க்கான தேர்வு, நாடு முழுவதும் 60 நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3ஆவது வாரத்தில் வெளியாக உள்ளது.  தேர்வர்கள் nift.ac.in என்ற இணையதளத்தில் இருந்து அனுமதிச் சீட்டைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://exams.nta.ac.in/NIFT/ என்ற இணைப்பை க்ளிக் செது விண்ணப்பிக்க வேண்டும். 

கூடுதல் தகவல்களுக்கு: https://nift.ac.in/sites/default/files/inline-files/PROSPECTUS-2024.pdf

தேர்வு முடிவுகள் எப்போது?

வழக்கமாக நுழைவுத் தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும். ஏப்ரல் மாதத்தில் நேரடித் தேர்வு நடைபெறும். இறுதிக்கட்டத் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும். 

விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால், NIFTADMISSIONSIN@GMAIL.COM என்ற இ- மெயில் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Valluvar Kottam: ரூ.80 கோடி கொட்டி அப்கிரேட், வள்ளுவர் கோட்டம் பெற்ற அப்டேட்கள் என்ன? புதிய வசதிகளின் விவரங்கள்
Valluvar Kottam: ரூ.80 கோடி கொட்டி அப்கிரேட், வள்ளுவர் கோட்டம் பெற்ற அப்டேட்கள் என்ன? புதிய வசதிகளின் விவரங்கள்
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!
நீட் தேர்வில் அடித்து தூள் கிளப்பிய அரசு பள்ளி மாணவர்கள்... சாதனை படைத்த விழுப்புரம்
நீட் தேர்வில் அடித்து தூள் கிளப்பிய அரசு பள்ளி மாணவர்கள்... சாதனை படைத்த விழுப்புரம்
கிளாம்பாக்கம் ரயில் நிலைய திறப்பு தள்ளிப்போவது ஏன்? தமிழக அரசுதான் காரணமா?
கிளாம்பாக்கம் ரயில் நிலைய திறப்பு தள்ளிப்போவது ஏன்? தமிழக அரசுதான் காரணமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி
மிரட்ட ஆரம்பித்த பிரேமலதா! குழம்பி நிற்கும் EPS! தேமுதிகவினர் கொடுத்த ஐடியா
Thanjavur News : 30 லட்சம்..வெறும் 4 நாள்!சரிந்து விழும் ஊராட்சி கட்டிடம் கொந்தளிக்கும் தஞ்சை மக்கள்
Hindu Munnani Vs CPIM :  நடுரோட்டில் அடிதடி! இந்து முன்னணி vs மார்க்சிஸ்ட்‘’நீயெல்லாம் பேசலாமா?’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Valluvar Kottam: ரூ.80 கோடி கொட்டி அப்கிரேட், வள்ளுவர் கோட்டம் பெற்ற அப்டேட்கள் என்ன? புதிய வசதிகளின் விவரங்கள்
Valluvar Kottam: ரூ.80 கோடி கொட்டி அப்கிரேட், வள்ளுவர் கோட்டம் பெற்ற அப்டேட்கள் என்ன? புதிய வசதிகளின் விவரங்கள்
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!
நீட் தேர்வில் அடித்து தூள் கிளப்பிய அரசு பள்ளி மாணவர்கள்... சாதனை படைத்த விழுப்புரம்
நீட் தேர்வில் அடித்து தூள் கிளப்பிய அரசு பள்ளி மாணவர்கள்... சாதனை படைத்த விழுப்புரம்
கிளாம்பாக்கம் ரயில் நிலைய திறப்பு தள்ளிப்போவது ஏன்? தமிழக அரசுதான் காரணமா?
கிளாம்பாக்கம் ரயில் நிலைய திறப்பு தள்ளிப்போவது ஏன்? தமிழக அரசுதான் காரணமா?
Trump Nobel Prize: ”சொன்னா கேளுங்கய தரமாட்டாங்க” ட்ரம்ப் பேச்சை மீறும் பாக்., நோபல் பரிசு கேட்டு பிடிவாதம்
Trump Nobel Prize: ”சொன்னா கேளுங்கய தரமாட்டாங்க” ட்ரம்ப் பேச்சை மீறும் பாக்., நோபல் பரிசு கேட்டு பிடிவாதம்
பல்லாவரம் முதல் ஐடி காரிடார் வரை: உங்கள் பகுதியில் உள்ள இடங்களின் பட்டியல் இதோ!
பல்லாவரம் முதல் ஐடி காரிடார் வரை: உங்கள் பகுதியில் உள்ள இடங்களின் பட்டியல் இதோ!
Car Audio System: லோ பட்ஜெட்டில் பட்டாசான ஆடியோ சிஸ்டம் - கார் மட்டுமில்ல மனசும் பறக்கும் - டாப் 5 மாடல்
Car Audio System: லோ பட்ஜெட்டில் பட்டாசான ஆடியோ சிஸ்டம் - கார் மட்டுமில்ல மனசும் பறக்கும் - டாப் 5 மாடல்
Top 10 News Headlines: சிகரம் தொட்ட விருதுநகர் பெண், ஜெய்ஷ்வால் மிரட்டல், நீரஜ் சோப்ரா அசத்தல் - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines: சிகரம் தொட்ட விருதுநகர் பெண், ஜெய்ஷ்வால் மிரட்டல், நீரஜ் சோப்ரா அசத்தல் - டாப் 10 செய்திகள்
Embed widget