மேலும் அறிய

NExT Exam: மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; நெக்ஸ்ட் தேர்வு திடீரென ஒத்திவைப்பு- விவரம்

மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி, நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி, நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

நெக்ஸ்ட் தேர்வு வழிமுறைகள் குறித்த அறிவிக்கையை அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது. இதில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு, பொது தகுதித் தேர்வாக நெக்ஸ்ட் தேர்வு (National Exit Test - NExT) நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மெரிட் அடிப்படையில் முதுநிலை மருத்துவம் படிக்க முடியும். அதேபோல மருத்துவத் தொழில் செய்யப் பதிவு செய்ய முடியும். மேலும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் இந்தியாவில் பதிவு செய்ய முடியும்.

ஆண்டுக்கு இருமுறை

இதுகுறித்து மருத்துவ ஆணையம், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வெபினாரை நடத்தியது. அதில் ஆண்டுக்கு இருமுறை, மே மற்றும் நவம்பர் மாதங்களில் நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தகவல்கள் கூறப்பட்டன. 

வலுத்த எதிர்ப்புகள்

எனினும் இதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. எய்ம்ஸ் விழாவில் கலந்துகொண்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியாவிடம் நெக்ஸ்ட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், ’’2019 பேட்ச் எம்பிபிஸ் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டியதில்லை. 2020 பேட்ச் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டி இருக்கும். 

மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த முடிவையும் மத்திய அரசோ, தேசிய மருத்துவ ஆணையமோ எடுக்காது.  அதேபோல நெக்ஸ்ட் தேர்வு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான இறுதித் தேர்வாக இருக்காது. 

மருத்துவம் முடித்த மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்படும். ஆனால் பட்டம் பெற்ற பிறகு, மருத்துவ கவுன்சிலில்  பதிவு செய்ய நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது நெக்ஸ்ட் தேர்வு நீட் தேர்வுக்கு சமமான ஒன்றாகும்’’ என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி இருந்தார்.

எனினும் எம்பிபிஎஸ் சேரும்போது நீட் தேர்வு கட்டாயம் என்றதற்குப் பிறகு, எம்பிபிஎஸ் படிக்கும்போதும் படித்த பிறகும் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறைக்கு மாணவர்களும் மருத்துவக் கல்லூரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

தேர்வு ஒத்திவைப்பு

இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி, நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மறு அறிவிப்பு வரும்வரை இந்த அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Embed widget