NEET UG Counselling: மருத்துவக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்; ஆக.21 வரை விண்ணப்பிப்பது எப்படி?
NEET UG Counselling 2024: இந்திய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வு 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர, விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு, ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்கான தேதிகளை மருத்துவத் தேர்வுக் குழு அண்மையில் வெளியிட்டது. இதன்படி நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 14) முதல் இளநிலை மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது. அகில இந்திய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 14 முதல் 21ஆம் தேதி வரை முதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இவர்களுக்கான சாய்ஸ் ஃபில்லிங் ஆக.16 முதல் 20ஆம் தேதி வரை நடக்கிறது. இவர்களுக்கான இட ஒதுக்கீடு, 21, 22ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. முதல் சுற்றுக் கலந்தாய்வு முடிவுகள் ஆக.23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள், ஆகஸ்ட் 24 முதல் 29ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம்.
2ஆம் சுற்றுக்கான கலந்தாய்வு எப்போது?
2ஆம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி செப்.10ஆம் தேதி வரை நடைபெறும் . இவர்களுக்கான சாய்ஸ் ஃபில்லிங் செப்.6 முதல் 10ஆம் தேதி வரை நடக்கிறது. இவர்களுக்கான இட ஒதுக்கீடு, 11, 12ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. முதல் சுற்றுக் கலந்தாய்வு முடிவுகள் செப்.13ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
மாணவர்கள், செப்டம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம். அதேபோல செப். 25 முதல் அக்.15 வரை 3ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4ஆம் சுற்றுக் கலந்தாய்வு அக்டோபர் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு
முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும். இது ஒட்டுமொத்த அளவில் 15 சதவீத இடங்களுக்கு நடத்தப்படும். தொடர்ந்து மாநில அளவிலான இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்கும்.
கலந்தாய்வு, விண்ணப்பப் பதிவு குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு, மருத்துவத் தேர்வுக் குழு இணையதளத்தைக் காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு குறித்த முழு விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s3e0f7a4d0ef9b84b83b693bbf3feb8e6e/uploads/2024/07/2024072930.pdfhttps://mcc.nic.in/
மேலும் தகவல்களுக்கு: https://mcc.nic.in/ug-medical-counselling/