NEET UG Age Limit: நீட் தேர்வு எழுத வயது வரம்பில்லை- தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி
NEET UG Upper Age Limit: இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுத வயது வரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுத வயது வரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் 2019ஆம் அறிமுகப்படுத்த இந்தத் தேர்வில், பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 25 ஆக இருந்தது. பட்டியலினப் பிரிவுக்கு அதிகபட்ச வயது 30 ஆகும். எனினும் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் இருந்தது. இதனால் அனைத்து வயதினரும் தேர்வை எழுதி வந்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வை எழுத உச்சபட்ச வயது வரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவ ஆணையத்தின் செயலாளர் புல்கேஷ் குமார், தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், ''நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் 4ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீட் இளங்கலைத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் முன்பாக, தேசியத் தேர்வுகள் முகமை இந்த வயது வரம்பு தளர்வைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் ஒப்புதலோடு இந்தத் தகவல் வெளியிடப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: TET Notification 2022: ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 14 முதல் எப்படி விண்ணப்பிக்கலாம் : முழு விவரம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்