கோடையில் ஜில் ஜில் ஃப்ரிட்ஜ் தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மிகவும் குளிர்ந்த நீரை குடித்தால் உணவு சரியாக ஜீரணமாகாமல் போகலாம்.

குளிர்ந்த நீரை அடிக்கடி குடிப்பதால் தொண்டை வலி மற்றும் தொற்று ஏற்படலாம்.

குளிர்ந்த நீரை குடிப்பதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம்.

மிகவும் குளிர்ந்த நீரை குடித்தால் உடனடியாக தலைவலி வரலாம்.

குளிர்ந்த நீர் பற்களில் பாதிப்பை ஏற்படுத்தி உணர்திறனை அதிகரிக்கும்.

சில சமயங்களில் குளிர்ந்த நீரை குடிப்பதால் இதயத் துடிப்பு தற்காலிகமாக மாறக்கூடும்.

குளிர்ந்த நீரை குடிக்கும்போது கொழுப்பு உறைந்து செரிமானம் கடினமாகிறது என்று கருதப்படுகிறது.

குளிர்ச்சியான உணவுகளை அதிகமாக உட்கொண்டால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம்.

மிகவும் குளிர்ந்த நீரை அதிகமாக குடிப்பதால் தாகம் முழுமையாக தீராமல் போகலாம்.

குளிர்ந்த நீரை அதிகமாக குடிப்பதால் சளி மற்றும் இருமல் வரும் வாய்ப்பு உள்ளது.

குளிர்ந்த நீரை விட அறை வெப்பநிலையில் உள்ள நீரை குடிப்பது, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.