மேலும் அறிய

NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு

NEET Re Test : உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் மறு நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது.

NEET Re Test : நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ள மருத்துவ படிப்பிற்கான நீட் மறு நுழைவுத்தேர்வில் பங்கேற்க சுமார் 22 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இன்று நீட் மறுதேர்வு..

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இன்று நடைபெற உள்ள நீட் மறு நுழைவுதேர்வை, சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு முழுமையாகத் தயாராக உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாட்டின் 551 நகரங்களில் உள்ள 5,440 மையங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 மையங்களிலும் இன்று தேர்வினை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இது நாட்டின் மிகப்பெரிய போட்டித் தேர்வுகளில் ஒன்றாக அமைகிறது. ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் நடத்தப்படவுள்ள இந்தத் தேர்வில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். நேர்மை, பாதுகாப்பு மற்றும் மாணவர்களுக்கான மன அழுத்தத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுதேர்வும்.. மாணவர்கள் தற்கொலையும்..

முன்னதாக, கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை வினாத்தாள் கசிவு காரணமாக மத்திய அரசு ரத்து செய்தது. இதனை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவும் வலியுறுத்தினர். இதனிடையே, மீண்டும் தேர்வுக்கு தயாராகும் அச்சம் மற்றும் மன அழுத்தம் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் எந்தவித குளறுபடிகளும் இன்றி பாதுகாப்பான முறையில் இன்றைய தேர்வினை நடத்தி முடுக்க அரசு தீவிரம் காட்டுகிறது. 

உச்சகட்ட கண்காணிப்பில் தேர்வு

இன்றைய தேர்வில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தேசிய தேர்வுகள் முகமை உச்சகட்ட கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. 95,000-க்கும் மேற்பட்ட தேர்வு அறைகளானது ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 560 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. இதன் நேரலைக் காட்சிகள் தேசிய, மாநில மற்றும் அமைச்சக மட்டங்களில் கவனிக்கப்படும். அசாதாரணமான செயல்பாடுகளைக் கண்டறிய, செயற்கை நுண்ணறிவு கருவிகளும் காட்சிகளை ஆய்வு செய்யும். மின்னணு முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மையங்கள் முழுவதும் 51,311 நடமாடும் சிக்னல் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு அறையிலும் இரண்டு கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள், மேலும் ஒவ்வொரு மையமும் சீராகச் செயல்படுவதற்கு கூடுதல் பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்:

மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள இந்த தேர்வை எந்த பிரச்னையும் இன்றி நடத்தி முடிக்க பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் சுமார் 6,700 கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்ட மெய்நிகர் கண்காணிப்பகங்கள் நேரலை ஒளிபரப்புகள் மூலமாக கண்காணிக்கப்பட உள்ளன.

கடுமையான அடையாளச் சோதனைகளை உறுதி செய்வதற்காக, ஏறத்தாழ 38,795 சோதனைப் பணியாளர்களும், பயோமெட்ரிக் சரிபார்ப்பைக் கையாளும் 48,448 பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்பச் சிக்கல்களை உடனடியாக நிர்வகிப்பதற்காக, ஒவ்வொரு மையத்திலும் ஒரு மைய அமைப்பு அதிகாரி பணியமர்த்தப்பட்டுள்ளார்.

வினாத்தாள்களைப் பெறுவதற்கும், ஓஎம்ஆர் தாள்களைச் சேகரிப்பதற்கும் வங்கி மற்றும் அஞ்சல் துறைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தயார்நிலையை உறுதி செய்வதற்காக மாநிலங்கள் முழுவதும் ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை

அதே நேரத்தில், குடிநீர், ORS, பெற்றோருக்கான நிழலான காத்திருப்புப் பகுதிகள், ஒவ்வொரு அறையிலும் சுவர் கடிகாரங்கள் மற்றும் கணக்கீடுகளுக்கான கூடுதல் தாள்கள் போன்ற மாணவர்களுக்கு உகந்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இடது கை பழக்கம் உள்ள தேர்வர்களுக்காக, வினாப் புத்தகங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட எழுதும் இடம் வழங்கப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜாமர்கள், பயோமெட்ரிக்ஸ் மற்றும் சிசிடிவி நெட்வொர்க்குகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் சோதிப்பதற்காக, ஜூன் 20 அன்று நாடு தழுவிய மாதிரி ஒத்திகை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Embed widget