மேலும் அறிய

NEET Re-Exam: ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்

NEET Re Exam 2026: நீட் தேர்வுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ராணுவ ஹெலிகாப்டர் பயன்பாடு, சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு, டெலிகிராமிற்கு தடை போன்ற அதிரடியான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

NEET Re Exam Security: மருத்துவ படிப்பிற்கான நீட் மறுதேர்வு வரும் ஜுன் 21ம் தேதி நாடு முழுவதும் 500-க்கும் அதிகமான மையங்களில் நடைபெற உள்ளது.

ஜுன்.21 - நீட் மறுதேர்வு

2026-27 கல்வியாண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழுவதும், 551 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நடைபெற்றது. சுமார் 23 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக கடந்த 7ம் தேதி தகவல் வெளியாகவே, தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பலரையும் கைது செய்துள்ளது. அதேநேரம், தேர்வு முகமையின் பல்வேறு தேர்வுகளிலும் குளறுபடி நடைபெறுவது தொடர்கதையாகி உள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக களமாடி வருகின்றன. இதனிடையே, வரும் ஜுன் 21ம் தேதி அன்று நீட் மறுதேர்வு நடத்தப்பட்ட உள்ளது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உச்சகட்ட பாதுகாப்பில் நீட் தேர்வு

வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்வதில் தொடங்கி, விடைத்தாளகளை பாதுகாப்பாக கொண்டு செல்வது வரையிலான நீட் தேர்வை,  முற்றிலுமாக பாதுகாப்பானதாகவும், எந்தவித குளறுபடிகளும் நிகழாத வண்ணமும் நடத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ராணுவ விமானங்களை பயன்படுத்துவது, பாதுகாப்பு வீரர்களை களமிறக்குவது, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை என அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

  • வினாத்தாள்கள் மற்றும் தேர்வுக்குப் பிந்தைய ஓஎம்ஆர் விடைத்தாள்கள் உள்ளிட்ட முக்கியமான தேர்வுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்குப் பாதுகாப்பு வழங்குமாறு மத்திய ரிசர்வ் காவல் படை (சி) மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) ஆகியவற்றுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
  • வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல ராணுவ விமானங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன
  •  விமான நிலையங்கள், ஹெலிபேடுகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் மத்திய ஆயுதக் காவல் படையினர் (CAPF) இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்பட உள்ளனர்
  • தரைமார்க்கமாக வினாத்தாளை கொண்டு செல்வதை முடிந்தவரையில் தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்
  • வினாத்தாள் சட்டவிரோதமாக கசிவதை தடுக்க தற்காலிகமாக டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
  • வினாத்தாள்களை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல தபால் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது

அச்சுறுத்தும் நடவடிக்கைகள்

நீட் தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் ஏற்கனவே தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. தற்போது மறுதேர்வு நடத்துவதுடன், அதற்கான வினாத்தாள்களுக்கு ராணுவ பலத்துடன் பாதுகாப்பு வழங்குவது என்பது, நீட் தேர்வு குறித்த பார்வையை ஒட்டுமொத்தமாகவே மாற்றும் விதமாக உள்ளது. ஒரு தேர்வுக்கு இவ்வளவு கெடுபிடிகள் என்பது மாணவர்களுக்கே ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதகாவும் கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget