மேலும் அறிய

என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 பள்ளி மாணவர்களுக்குப் பிஸ்கட் வழங்கிய நிர்வாகம்.

விளாத்திகுளம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவிற்குப் பதில் பிஸ்கட் வழங்கப்பட்ட செய்தி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கே, நேற்று (ஜூன் 20) காலை வழக்கம்போல உணவு கொடுக்கப்பட்டது. அப்போது 40 குழந்தைகளுக்கு உணவு போதவில்லை. 

உணவுக்கு பதில் பிஸ்கட்

இதனால் காலை உணவு கிடைக்காமல் குழந்தைகள் பசியில் துடித்தனர். இந்த நிலையில், அந்த 40 குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் புகாரும் அளிக்கப்பட்டது. இந்த புகாரினைத் தொடர்ந்து கோவில்பட்டி தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் செல்வி வினோதா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 பள்ளி மாணவர்கள் உணவின்றித் தவித்து, அவர்களுக்குப் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக வெளியாகிய செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பசியின்றிப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்படும் மக்கள் நலத்திட்டங்களைக் கூட சரியாகச் செயல்படுத்தத் தெரியாத ஒரு திறமையற்ற அரசாக ஜோசப் விஜய் அரசு செயல்பட்டு வருகிறது.

விசித்திரமான விளக்கம் எதற்கு?

மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறும் விசித்திரமான விளக்கம் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப உணவின் அளவையும் அதிகரிக்கத் திட்டமிடாதது அரசு நிர்வாகத்தின் தவறே ஆகும்.

எனவே, தமிழக முதல்வர் விஜய் விளாத்திகுளம் பள்ளிச் சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தப் பள்ளியிலும் இதுபோன்ற அவலநிலை ஏற்படக்கூடாது

இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற அவலநிலை ஏற்படக் கூடாது என ஜோசப் விஜய் தலைமையிலான அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget