மேலும் அறிய

UPSC Scholarship: யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

UPSC Mains Scholarship: தமிழ்நாட்டைச் சேர்ந்த யுபிஎஸ்சி தேர்வர்கள் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த யுபிஎஸ்சி தேர்வர்கள் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை 25,000 ரூபாயைப் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் இந்தத் தேர்வின் மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வை எழுத தமிழ்நாட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கும் என நடப்பு நிதியாண்டில் என தெரிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை இன்று தொடங்கி உள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நான் முதல்வன்  சிறப்புத் திட்ட இயக்குநர் ஊக்கத் தொகைக்கான வழிமுறைகளை வெளியிட்டார். 

அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் தொடக்கமாக. ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2023ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத் தொகைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

இந்த நிலையில் விண்ணப்பப் பதிவு இன்று (ஆகஸ்ட் 11) தொடங்கி உள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

* தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் மட்டுமே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
 
* 2023ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மட்டுமே உதவித்தொகை வழங்கத் தகுதியானவர்கள் ஆவர்.

* கடந்த ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் யாரும் விண்ணப்பிக்க முடியாது. 

யுபிஎஸ்சி தேர்வர்கள் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு- Email: nmcegrievances@naanmudhalvan.in  
தொலைபேசி எண்கள்: 9043710214 / 9043710211

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TNPSC தேர்வர்களே.. மே 28தான் கடைசி; அதுக்குள்ள இதை செஞ்சிடுங்க- டிஎன்பிஎஸ்சி அலர்ட்!
TNPSC தேர்வர்களே.. மே 28தான் கடைசி; அதுக்குள்ள இதை செஞ்சிடுங்க- டிஎன்பிஎஸ்சி அலர்ட்!
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... பல்வேறு துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு !
சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... பல்வேறு துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு !
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”
பினராயி கோட்டையை வீழ்த்தியகாங்கிரஸின் பிரம்மாஸ்திரம் !யார் இந்த வி.டி.சதீசன்?
Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam : தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Vijay: தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
Annamalai : ’அவர் மீண்டும் வரனும் – பாஜகவில் எழத் தொடங்கியது கலக குரல்’ தலைவராகிறாரா அண்ணாமலை..?
’அண்ணாமலைக்கு ஆதரவாக எழும் குரல்கள்’ மீண்டும் பாஜக தலைவர் ?
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
TN Govt Vs GCC: ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
Embed widget