மேலும் அறிய
Gold and silver rate today : அக்டோபர் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி.! குறைந்தது தங்கம் விலை-ஒரு சவரன் என்ன விலை.?
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், நேற்று திடீரென அதிகரித்து நகைப்பிரியர்களை சற்று அதிர வைத்தது. இந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது.

Gold and silver rate today
Source : ABPLIVE AI
ஏறி இறங்கும் தங்கம் விலை
- செப்டம்பர் 26-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 14,000 ரூபாய்க்கும்,சவரனுக்கு 80 ரூபாய் குறைந்ந்து 1,12,000 ரூபாய்க்கு விற்பனை.
- செப்டம்பர் 27 ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை.
- செப்டம்பர் 28-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 335 ரூபாய் குறைந்து, கிராம் 13,665 ரூபாய்க்கும், சவரன் 1,09,320 ரூபாய்க்கும் விற்பனை.
- செப்டம்பர் 29-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 13,640 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 1,09,120 ரூபாய்க்கு விற்பனை.
- செம்படம்பர் 30-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,710 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 1,09,680 ரூபாய்க்கு விற்பனை.
இன்றைய தங்கம் விலை என்ன.?
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில், நேற்று திடீரென உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர வைத்தது. இந்த நிலையில் இன்று மாதத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. இந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 13,680 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,09,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை என்ன.?
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையிலும் குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















