மேலும் அறிய

M.Ed Admission 2023: அரசுக் கல்லூரிகளில் எம்.எட். படிப்பு; செப்.25 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

தமிழ்நாடு அரசு கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ எம்.எட். எனப்படும் முதுநிலை கல்வியியல்‌ பட்டப்‌ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தமிழ்நாடு அரசு கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ எம்.எட். எனப்படும் முதுநிலை கல்வியியல்‌ பட்டப்‌ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மாணவர்‌ சேர்க்கை குறித்து கல்லூரிக்‌ கல்வி இயக்கக இயக்குநர் கூறி உள்ளதாவது:

2023- 2024 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில்‌ உள்ள அரசு கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ எம்‌.எட்‌. எனப்படும் முதுநிலை கல்வியியல்‌ பட்டப்படிப்பு ( Master of Education (M. Ed.)) முதலாமாண்டு மாணாக்கர்‌ சேர்க்கைக்கான விண்ணப்பங்களை https://www.tngasa.in/ என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பம்‌ செய்ய ஒவ்வொரு கல்லூரிக்கும்‌ விண்ணப்பக்‌ கட்டணம்‌ ரூ.58 மற்றும்‌ விண்ணப்ப பதிவுக்‌ கட்டணம்‌ ரூ.2/. மொத்தம்‌ ரூ.60/. (ரூபாய்‌ அறுபது மட்டும்‌) செலுத்தப்படவேண்டும்‌. 

SC / SCA / ST விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்பப் பதிவுக் கட்டணம்‌ ரூ.2/- (ரூபாய்‌ இரண்டு மட்டும்‌) செலுத்தினால்‌ போதுமானது.

மாணாக்கர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத்‌ தெரிவு செய்தல்‌ வேண்டும்‌. இது தொடர்பான கூடுதல்‌ விவரங்கள்‌ www.tngasa.in  என்ற இணையதள முகவரியில்‌ தெரிவிக்கப்படும்‌.

விண்ணப்பம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணம்‌ : விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌  டெபிட் அட்டை/ Credit Card /Net Banking / UPI மூலம்‌ இணையதள வாயிலாக செலுத்தலாம்‌. இணையதள வாமிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்‌  The Director, Directorate of Collegiate Education, Chennai - 15 என்ற பெயரில்‌ 25.09.2023 அன்று அல்லது அதற்குப்‌ பின்னர்‌ பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும்‌ அல்லது நேரடியாகவும்‌ செலுத்தலாம்‌.

மாணவர்‌ சேர்க்கை வழிகாட்டி மற்றும்‌ கால அட்டவணையை மாணவர்கள்‌ www.tngasa.in  என்ற இணையதளம்‌ வாயிலாக அறிந்துகொள்ளலாம்‌.

இணையதள வாயிலாக விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: செப்டம்பர் 25, 2023

இணையதள வாயிலாக விண்ணப்ப பதிவு செய்ய இறுதி நாள்: செப்டம்பர் 30, 2023

தொடர்பு எண்‌ : 93634 - 62070, 93634 - 62007, 93634 - 62042, 93634 - 62024.

இவ்வாறு கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌ தெரிவித்துள்ளார். 

 பி.எட். சேர்க்கை

2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பான பி.எட். முதலாமாண்டுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌ அறிவித்தார். செப்டம்பர்11ஆம் தேதி விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஆகும்.  

உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வர மூர்த்தி கடந்த ஆண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்படி, அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

பி.எட். படிப்பில் சேர விரும்பும் 50 % மதிப்பெண்களை இளங்கலைப் படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும். எனினும் வகுப்பு வாரியாகத் தளர்வு அளிக்கப்படுகிறது. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமும் எம்பிசி பிரிவினருக்கு 43 சதவீதமும் பிசி பிரிவினருக்கு 45% மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும். 

கூடுதல் விவரங்களுக்கு: www.tngasa.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
TNPSC குரூப் 2 அரசு வேலை பெற சூப்பர் பிளான்! இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!
TNPSC குரூப் 2 அரசு வேலை பெற சூப்பர் பிளான்! இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget