மேலும் அறிய

கேரளாவில் பள்ளி விடுமுறை மாற்றம்: கோடை விடுமுறை ஜூன்-ஜூலைக்கு மாறினால் என்ன? சூடுபிடிக்கும் விவாதம்

42% பேர் விடுமுறையை ஜூன்- ஜூலைக்கு மாற்றுவதை ஆதரித்துள்ளனர். 30% பேர் தற்போதைய ஏப்ரல்-மே விடுமுறையே தொடர வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் மாநிலத்திற்கு ஏற்ப பள்ளி மாணவர்களுக்கு பாட திட்டங்கள் மற்றும் விடுமுறை நாட்கள் நடைமுறையில்  உள்ளன. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் கோவை விடுமுறை ஏப்ரல் மற்றும் மே மாதம் விடப்படுகிறது. இந்நிலையில், கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பள்ளி விடுமுறை கால அட்டவணையை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசு ஒரு முக்கிய விவாதத்தை முன்னெடுத்துள்ளது. தற்போது கோடைக்காலத்தில் வழங்கப்படும் வருடாந்திர விடுமுறையை, கனமழை பெய்யும் பருவமழை மாதங்களுக்கு மாற்றுவது குறித்து கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி ஒரு திட்டத்தை முன்மொழிந்து, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களை கோரியுள்ளார்.

கேரளாவில் பள்ளி விடுமுறை மாற்றம்: கோடை விடுமுறை ஜூன்-ஜூலைக்கு மாறினால் என்ன? சூடுபிடிக்கும் விவாதம்

தமிழகத்தை போலவே கேரளாவில் தற்போது பள்ளிகளுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அதிக வெப்பம் நிலவுவதால், மாணவர்கள் வெளியில் விளையாடுவதும், பயணங்கள் மேற்கொள்வதும் கடினமாக இருக்கும். அதே சமயம், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதனால், கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் வானிலை எச்சரிக்கைகள் காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி விடுமுறை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பல சமயங்களில், பள்ளி கட்டிடங்கள் மழை நிவாரண முகாம்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இது மாணவர்களின் கல்வியை அதிகம் பாதித்தது. 

இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி தனது முகநூல் பக்கத்தில் ஒரு புதிய யோசனையை முன்வைத்துள்ளார். அதன்படி, ஏப்ரல்-மே மாதங்களில் வழங்கப்படும் கோடை விடுமுறையை, ஜூன்-ஜூலை மாதங்களுக்கு மாற்றினால் என்ன என்பது தான் அந்த யோசனை. அமைச்சரின் இந்த அறிவிப்பு, கேரளாவில் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கேரள பத்திரிகை நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், 42% பேர் விடுமுறையை ஜூன்-ஜூலைக்கு மாற்றுவதை ஆதரித்துள்ளனர். அதே நேரத்தில், 30% பேர் தற்போதைய ஏப்ரல்-மே விடுமுறையே தொடர வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

கேரளாவில் பள்ளி விடுமுறை மாற்றம்: கோடை விடுமுறை ஜூன்-ஜூலைக்கு மாறினால் என்ன? சூடுபிடிக்கும் விவாதம்

சுமார் 27% பேர் மே-ஜூன் மாதங்களில் விடுமுறை அளிப்பது ஒரு நல்ல சமரசமாக இருக்கும் என கருதுகின்றனர். இந்த மாற்றத்தை ஆதரிப்பவர்கள், பருவமழை காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது கோடை வெயிலில் அனுப்புவதை விட ஆபத்தானது என்று வாதிடுகின்றனர். மழைக்காலத்தில் ஏற்படும் நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் நோய்த்தொற்றுகள் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், மழைக்கால விடுமுறை, கற்பித்தல் நாட்கள் இழப்பை குறைக்கும் மற்றும் குடும்பங்கள் தங்கள் பயணங்களை திட்டமிடவும் உதவும் என ஐ.ஐ.எம் கோழிக்கோடு பேராசிரியர் சூர்ய பிரகாஷ் பதி போன்ற கல்வியாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், பள்ளிகளை ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தினால், மாணவர்கள் கடுமையான வெப்பத்திற்கு ஆளாக நேரிடும் என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் எந்த அவசர முடிவும் எடுக்கப்படாது என்று அமைச்சர் சிவன்குட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

மதுரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு: பலத்த சோதனைக்கு பின் நடைபெற்றது !
மதுரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு: பலத்த சோதனைக்கு பின் நடைபெற்றது !
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Grand Vitara Hybrid: மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
Embed widget