மேலும் அறிய

JEE Advanced: ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வரலாற்று சாதனை:  10 ஆயிரம்+ மாணவிகள் தேர்ச்சி!

JEE Advanced 2026: ஐஐடி நுழைவுத்தேர்வு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, முதல்முறையாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் வரலாற்றில் முதல்முறையாக 10,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்ச்சி பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவின் மிக உயரிய மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடி-களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

வரலாற்றுச் சாதனை

இந்தத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு முடிவுகளில்  மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஐஐடி நுழைவுத்தேர்வு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, முதல்முறையாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நடப்பு ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்தியது. மே 17ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் மொத்தம் 1,88,389 மாணவ மாணவிகள் இந்த கடினமான தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,79,694 மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், ஒட்டுமொத்தமாக 56,880 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

10,107 பேர் மாணவிகள்

இவர்களில் 10,107 பேர் மாணவிகள் ஆவர். கடந்த காலங்களில் ஐஐடி வளாகங்களில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

ஜூன் 1ஆம் தேதி வெளியான தேர்வு முடிவுகளில் ஐஐடி டெல்லியைச் சேர்ந்த ஷுபம் குமார் முதலிடம் பெற்றார். இவர் 360 மதிப்பெண்களுக்கு 330 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்.

அரோஹி தேஷ்பாண்டே

அதே நேரத்தில் மாணவிகளுக்கான தேர்ச்சிப் பட்டியலில் மாணவி அரோஹி தேஷ்பாண்டே (ஐஐடி டெல்லி மண்டலம்) தேசிய அளவில் 77-வது இடத்தைப் பிடித்து, மாணவிகள் தரப்பில் அகில இந்திய அளவில் முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளார். அவர் மொத்தம் உள்ள 360 மதிப்பெண்களுக்கு 280 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சித் துறைகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை இந்த தேர்வு முடிவுகள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
காது கேளாத, வாய் பேச இயலாத இளைஞரா நீங்கள்? உங்களுக்காகவே காத்திருக்கிறது சென்னை கிண்டி அரசு ஐ.டி.ஐ!
காது கேளாத, வாய் பேச இயலாத இளைஞரா நீங்கள்? உங்களுக்காகவே காத்திருக்கிறது சென்னை கிண்டி அரசு ஐ.டி.ஐ!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
Heart Attack: 60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்
60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
Cheap EV with 400KM Range: நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
Embed widget