ITI Admission: வேலைவாய்ப்பை உறுதி செய்யும் தொழிற்பயிற்சி..! அதுவும் இலவசமாக, சலுகைகள் என்னென்ன ?
Government Industrial Training Institute, Oragadam : அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) சேர்க்கைக்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
அரசு தொழிற்பயிற்சி நிலைய நேரடி மாணவர் (Spot Admission) சேர்க்கைக்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், ஒரகடம்
காஞ்சிபுரம் ( Kanchipuram ) : காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஒரகடம் சிப்காட் தொழிற் பூங்கா ( oragadam sipcot ) அரசினர் தொழிற் பயிற்சி ( Government Industrial Training Institute, Oragadam ) நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 16.08.2023 வரை நடைபெற்றது. தற்போது 31.08.2023 வரை நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் சேர்க்கை உதவி மையத்தினை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
என்னென்ன பிரிவுகள் உள்ளது ?
இரண்டு ஆண்டு பயிற்சி படிப்புகள்
Mechanic Motor Vehicle (SCVT) கம்மியர் மோட்டார் வாகனம்
Mechanic Refrigeration and Air-Conditioning Technician (SCVT) குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர்
Electronics Mechanic (SCVT) கம்மியர் மின்னணுவியல்
Mechanic Electrical Vehicle (SCVT) மெக்கானிக் எலக்ட்ரிக் வண்டி
Advanced CNC Machining Technician (SCVT) அட்வான்ஸ்டு CNC மிஷினிங் டெக்னிசியன்
ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு இரண்டு ஆண்டு கால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓராண்டு பயிற்சி படிப்புகள்
Manufacturing Process Control and Automation (SCVT) மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேசன்
Industrial Robotics and Digital Manufacturing Technician (இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன்) பிரிவிற்கு ஓராண்டு பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி கட்டணம் எவ்வளவு ?
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 750/- (ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கப்படும்.
பிற சலுகைகள் என்னென்ன ?
விலையில்லா மிதிவண்டி, மடிகணினி, இரண்டு செட் சீருடைக்கான துணி, தையற்கூலி, இலவச புத்தகங்கள், இலவச சேப்டி ஷீ, இலவச பஸ்பாஸ் ஆகியன வழங்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்
விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஒரகடம்
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9444621245 / 8122374342 / 8608728554.