மேலும் அறிய
Advertisement
நான் கல்லூரியில் படிக்கும்போது இதுபோல் விழிப்புணர்வு முகாம்கள் நடக்கவில்லை - மாணவர்கள் மத்தியில் பேசிய இறையன்பு
மன இறுக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட உள்ளிட்டவைகளை நீக்கி பொதுத் தேர்வில் மாணவர்கள் திறம்பட தேர்வு எழுதுவது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் உளவியல் துறை மற்றும் ஆலோசனை மையம் இணைந்து நடத்தும் கண்காட்சி அரங்கத்தை முன்னாள் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், மாணவ, மாணவியருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் உளவியல் துறை மற்றும் ஆலோசனை மையம் இணைந்து உளவியல் கண்காட்சி அரங்கத்தை பேராசிரியர் ஜோசஞ்சய், மற்றும் சுனில் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கண்காட்சி அரங்கத்தை தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
அதன் பின்னர் தூயநெஞ்சக் கல்லூரியின் கூட்ட அரங்கில் மாணவ, மாணவிகளுக்கு இலவச ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவ, மாணவிகளிடம், ”நான் கல்லூரியில் படிக்கும்போது இதுபோல் விழிப்புணர்வு முகாம்கள் எதுவும் நடக்கவில்லை. போட்டி தேர்வு என்று ஒன்று இருப்பது எனக்கு தெரியாது. 90% எடுக்க வேண்டும் என்று குறிக்கோளாக படித்தேன்” எனப் பேசினார். மேலும், மன இறுக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட உள்ளிட்டவைகளை நீக்கி பொதுத் தேர்வில் மாணவர்கள் திறம்பட தேர்வு எழுதுவது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion