மேலும் அறிய

CA Inter, Final Exam Application: சிஏ இடைநிலை, இறுதித் தேர்வுகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது; எப்படி விண்ணப்பிக்கலாம்?

CA Inter, Final November 2022 Exam: சிஏ ஃபவுண்டேஷன் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது.  

இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்புகளுக்காக நடத்தப்படும் சிஏ ஃபவுண்டேஷன் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது.  

இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக விரும்புவோர், ஐசிஏஐ (ICAI) எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர் ஆணையம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது  கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழ் வழங்கும். அதன் பிறகே அனைவரும் ஆடிட்டர் ஆகப் பணியாற்ற முடியும். 

மத்திய அரசு சார்பில் ஐசிஏஐ  நடத்தும் தகுதித் தேர்வு முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination),  இறுதித் தேர்வு (Final Examination) என்று மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. பட்டப் படிப்பை முடித்தவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. 

இந்த நிலையில், 2022-ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. குறிப்பாக முதல் தாளுக்கான (Principles and Practice of Accounting) தேர்வு ஜூன் 24ஆம் தேதியும், இரண்டாவது தாள் (Business Laws and Business Correspondence, and Reporting) ஜூன் 26ஆம் தேதியும் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று (ஆகஸ்ட் 10ஆம் தேதி) வெளியாகின.

சிஏ ஃபவுண்டேஷன் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது.  இந்தத் தேர்வு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்குத் தேர்வர்கள் இந்திய பட்டயக் கணக்காளர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான icaiexam.icai.org என்ற இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். 

நவம்பர் மாதம் நடைபெறும் சிஏ இறுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வர்கள் தாமதக் கட்டணத்தைச் செலுத்தி செப்டம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

பெயர், தொலைபேசி எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட்டு, தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 

CA Inter, Final Exam Application: சிஏ இடைநிலை, இறுதித் தேர்வுகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது; எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஐசிஏஐ  இடைநிலைத் தேர்வு,  இறுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

* ஐசிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான icaiexam.icai.org என்ற இணையப் பக்கத்துக்குச் செல்லவும்.

* முகப்புப் பக்கத்தில் லாகின் பொத்தானை அழுத்தி, தேவையான விவரங்களை உள்ளிடவும். 

* லாகின் செய்து உள்ளே செல்லவும்.

* விண்ணப்பப் பதிவுக்கான தகவல்கள், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டவும். 

* ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். 

* தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.

* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும். 

* விண்ணப்பித்த படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தேர்வு எப்போது?

ஐசிஏஐ  இடைநிலைத் தேர்வு நவம்பர் 2, 4, 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல ஐசிஏஐ இறுதித் தேர்வு நவம்பர் 1, 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இரண்டாவது கட்ட  (group 2 intermediate exams) இடைநிலைத் தேர்வுகள் நவம்பர் 11, 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும், ஐசிஏஐ இறுதித் தேர்வுகள் நவம்பர் 10, 12, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget