மேலும் அறிய

திருவாரூர், தூத்துக்குடி, தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக அறிவிப்பு!

விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை. திருவாரூரில் அதிகபட்சமாக 80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
 
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பொழியும் எனவும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், கடலோர மாவட்டங்களான புதுச்சேரி காரைக்கால் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நவம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 30ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

திருவாரூர், தூத்துக்குடி, தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக அறிவிப்பு!
இந் நிலையில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த 2 தினங்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் தரைக்கடை வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் மழையின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 80.6 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 52.8 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 14.0 மில்லி மீட்டரும், குடவாசலில் 15.4 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 15.8 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 16.0 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 20 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.

திருவாரூர், தூத்துக்குடி, தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக அறிவிப்பு!
தொடர் கனமழையின் காரணமாக தற்போது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 30 முதல் 40 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கக் கூடிய நிலை உருவாக வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூர் வாரவேண்டும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்விடுத்துள்ளது.
 
பள்ளிகளுக்கு விடுமுறை:
 
கனமழை காரணமாக திருவாரூர், தூத்துக்குடி, தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Embed widget