மேலும் அறிய

புதுச்சேரியில் ‘இந்தி’ மொழி கட்டாயம் : கல்வித் துறையின் சுற்றறிக்கையால் கிளம்பிய விவாதம்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டப் பள்ளிகளில், வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் இந்தி மொழியை இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி  : புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள CBSC பாடத்திட்டப் பள்ளிகளில், வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் இந்தி மொழியை இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

2026-2027ஆம் கல்வியாண்டு முதல் இந்தி மொழி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டப் பள்ளிகளில், வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் இந்தி மொழியை இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ கல்விப் பிரிவு இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை, மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி இயக்குநரின் அதிரடிச் சுற்றறிக்கை

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கல்வித் துறையில் இந்த முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கல்விப் பிரிவு இயக்குநர், அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "புதிய கல்வி கொள்கையின் வழிகாட்டுதலின்படி, 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி மொழி இரண்டாம் மொழியாகக் கட்டாயம் பயிற்றுவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கையும் மும்மொழிக் கொள்கையும்

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை (NEP) அமல்படுத்துவதில் புதுச்சேரி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2024ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி அரசுப் பள்ளிகள் படிப்படியாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டன.

புதிய கல்வி கொள்கையின் விதிகளின்படி:

மாணவர்கள் மொத்தம் மூன்று மொழிகளைப் பயில வேண்டும். அதில் ஒன்று வெளிநாட்டு மொழியாக இருக்கலாம், ஆனால் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக இருக்க வேண்டும். புதுச்சேரியைப் பொறுத்தவரை, முதல் மொழியாகத் தமிழ் உள்ள நிலையில், இரண்டாவது இந்திய மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.

பிரஞ்சு மொழிக்கு நேருமா பின்னடைவு?

புதுச்சேரியின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக பிரஞ்சு மொழி திகழ்கிறது. இங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் பிரஞ்சு மொழியை ஆர்வத்துடன் இரண்டாம் மொழியாகத் தேர்வு செய்து பயின்று வருகின்றனர். தற்போதைய புதிய உத்தரவின்படி, இரண்டு இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வருவதால், மாணவர்கள் பிரஞ்சு மொழிக்கு பதிலாக இந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது புதுச்சேரியின் பாரம்பரிய கல்வி முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கவலை

இந்தத் திடீர் அறிவிப்பு குறித்துப் பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், "ஏற்கனவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாணவர்கள் மாறி வரும் நிலையில், தற்போது இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது அவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் செயல். பிரஞ்சு மொழியைத் தேர்வு செய்யும் உரிமையை இது பறிப்பதாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் அரசியல் கட்சிகள் மத்தியிலும், இந்த இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் விவகாரம் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு வித்திட்டுள்ளது. 2026-ல் அமலுக்கு வரவுள்ள இந்தத் திட்டம், புதுச்சேரி கல்விச் சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தலைப்பு செய்திகள்

PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget