மேலும் அறிய

உயர்கல்வி தரம்: அமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை! மாணவர் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுமா?

உயர்கல்வி மாணவர்களின் கற்றல் மேம்பாடு, மாநில மற்றும் தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணாக்கர்களின் பங்கேற்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

உயர்கல்வித் தரத்தினை மேலும் உயர்த்திடவும், உயர்கல்வியை மாணாக்கர்களுக்கு கொண்டு சேர்ப்பதை உறுதி செய்திடவும் ஆய்வு கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தலைமையில் நடைபெற்றது.

உயர்கல்வித் தரத்தினை மேலும் உயர்த்திடவும், உயர்கல்வியை மாணாக்கர்களுக்கு கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வதுடன், திறன்மிகுந்த மாணாக்கர்களை உருவாக்குவது குறித்து இன்று (14.10.2025) உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தலைமையில் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அண்ணா, சென்னை, பாரதியார், பாரதிதாசன், மதுரை காமராசர், மனோன்மணியம், அழகப்பா, அண்ணாமலை, பெரியார், அன்னை தெரசா, திருவள்ளுவர், திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் பல்கலைக்கழகம் ஆகிய 13 அரசு பல்கலைக்கழகங்களைச் சார்ந்த பதிவாளர்கள், தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் பல்கலைக்கழக உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுடனான (IQAC Coordinators), ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அமைச்சர் முன்னிலையில் ஆய்வு

இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் கீழ் நடத்தப்படும் பாடப்பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் அது சிறப்பான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்தும், மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் சிறந்த முறையில் கிடைக்கப்பெறுகிறதா என்பது குறித்தும் உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்கள் மற்றும் கேள்வித்தாள்களின் தரம் குறித்தும் அமைச்சர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், உயர்கல்வி மாணவர்களின் கற்றல் மேம்பாடு, மாநில மற்றும் தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணாக்கர்களின் பங்கேற்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டு வரும் பாடப்பிரிவுகளின் கிரெடிட் (credits) கட்டமைப்பு பற்றியும், பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி சூழல் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திறன் மேம்பாட்டு பயிற்சி

இதனைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல், மாணவர்களின் மொழியாற்றலை மேம்படுத்துதல், கல்லூரி மாணாக்கர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையிலான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், மாணாக்கர்கள் தாங்கள் பெற்ற கல்வி அறிவினை வெளிபடுத்த ஏதுவாக ஆங்கில மொழியாற்றலை வளர்த்துக் கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாடப்பொருள் சார்ந்த செயல்பாடுகள் குறித்த இத்தகைய ஆய்வுகளையும் மேற்கொள்வதன் மூலம் மாநிலத்தில் உயர்கல்வியின் தரம் உயர்வதோடு மாணாக்கர்களின் திறன் மேம்பாடும். வேலைவாய்ப்பு சூழலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி அளவில் முழுமையான செயல்படுத்தப்படுவதை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தோடு இணைந்து கண்காணித்து உறுதி செய்யும் என்றும், தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தினை வலுப்படுத்தும் பொருட்டு இனிவரும் காலங்களில் இத்தகைய பாடப்பொருள் சார்ந்த ஆய்வுகள். பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகள் அளவிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!
பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
Embed widget