மேலும் அறிய

NEET Re Exam: கடும் வெப்ப அலை: ஜூனில் நீட் மறுதேர்வு- மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்

நீட் மறுதேர்வு குறித்து, மத்தியக் கல்வி அமைச்சகம் மாநில அரசுகளுக்கும் உள்ளூர் நிர்வாகங்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில்,  நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கான வசதிகளை உறுதி செய்ய மாநிலங்களுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கடுமையான கோடை வெயில் மற்றும் வெப்ப அலை நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் நீட் மறுதேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய அடிப்படை ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.

நடந்தது என்ன?

தேசிய அளவிலான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் லீக் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடைபெறுகிறது. மே 3ஆம் தேதி முதலில் தேர்வு நடந்த நிலையில், மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மாணவர்கள் தேர்வு எழுத மையங்களுக்கு வருவது பெரும் சவாலாக இருக்கும் என்பதால் கல்வி அமைச்சகம் மாநில அரசுகளுக்கும் உள்ளூர் நிர்வாகங்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அரசுகள் என்னென்ன செய்ய வேண்டும்?

இதுகுறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ’’மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவ மாணவிகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், போதுமான குடிநீர் வசதி, காற்றோட்டம் மற்றும் நிழற்கூரைகள் அமைக்கப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.

தேர்வு மையங்களுக்கு வெளியே மாணவர்களுக்காக காத்திருக்கும் பெற்றோர்களுக்கும் தேவையான நிழல் மற்றும் இதர அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு எவ்வித இடையூறும் இன்றி தேர்வு சுமுகமாக நடைபெற தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

அவசரகால மருத்துவ உதவிகள்

அவசரகால மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் அதற்காக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்களையும் மையங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்களை வந்தடைய தகுந்த போக்குவரத்து வசதிகளை அமைத்து தர வேண்டும்’’ என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget