மேலும் அறிய

கராத்தே, சிலம்பம்...வெற்றிக்கொடி கட்டி சாதனைகள் பல படைக்கும் தஞ்சை மாணவி ஹாசினி!

மின்னலை விட வேகமாய், காற்றை கிழிக்கும் ஓசையை உணர முடிகிறது ஹாசினியின் கரங்கள் சுற்றும் சிலம்பத்தின் வேகத்தில் இருந்து.

'எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி' என்றார் பாரதி. அதுபோல் முயற்சியைக் கைவிடாமல் சிலம்பம் சுற்றுவதில் ஏராளமான சாதனைகள் பல புரிந்து விருதுகளையும், வெற்றி கோப்பைகளையும் பெற்று பாராட்டுக்களை குவித்து வருகிறார் தஞ்சாவூர் முனிசிபல் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (நீலகிரி) மாணவி கே.ஹாசினி.

ஹாசினியின் அப்பா கே.கார்த்திகேயன். சுய தொழில் புரிகிறார். அம்மா ஸ்ரீதேவி. வல்லத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். தம்பி கைலாஷ். மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.

மின்னலை விட வேகமாய், காற்றை கிழிக்கும் ஓசையை உணர முடிகிறது ஹாசினியின் கரங்கள் சுற்றும் சிலம்பத்தின் வேகத்தில் இருந்து. மாணவி ஹாசினி வெற்றியின் பதிவுகள் அபாரமாக உள்ளன.

அவற்றில் சில...

15.8.21 அன்று தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று அசத்தி விருதையும், சான்றிதழையும் தனதாக்கி கொண்டுள்ளார்.


கராத்தே, சிலம்பம்...வெற்றிக்கொடி கட்டி சாதனைகள் பல படைக்கும் தஞ்சை மாணவி ஹாசினி!

இதேபோல் கடந்த 2021 டிசம்பர் மாதம் 17,18,19ம் தேதிகளில் கொடைக்கானலில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதல் பரிசு பெற்று கோப்பையை தட்டி பெற்றோருக்கும், கற்று தந்த ஆசானுக்கும் பெருமையை சேர்த்துள்ளார்.

கடந்த 18.01.2022 மதுரையில் நடந்த சோழன் புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் நடத்திய தொடர் சிலம்பம் சுற்றுதலில் 17.01.2022 காலை முதல் 18.01.2022 மாலை 4.00 மணி வரை சிலம்பம் சுற்றி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் மாணவி ஹாசினி.

இதேபோல் கடந்த 4.6.2022ல் கொடைக்கானலில் சர்வதேச அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை தட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். விருதும், சான்றிதழும் பெற்று அசத்தி உள்ளார்.

26.12.2022 நடந்த மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். இதேபோல் கடந்த 6.5.2023 மற்றும் 7. 5.2023 திருச்சியில் நடந்த ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சிலம்பம் மராத்தானில் பங்கேற்று 23 மணி 23 நிமிடங்கள் சிலம்பம் சுற்றுதல் போட்டியில் கலந்து கொண்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

வானமே எல்லை

திடமான நம்பிக்கையுடன் திறமையும், முயற்சியும் கைகோர்க்கின்றபோது வெற்றி வசப்பட்டு விடும் என்பதை போல் ஹாசினி சிலம்பம், கராத்தே போட்டிகளில் மேலும், மேலும் உழைப்பையும், முயற்சியையும் கொடுத்து வெற்றிக்கனியை பறித்து கொண்டே இருக்கிறார். மிக சிறிய வயதில் பெரிய அளவில் சாதனை புரிந்து வருகிறார். கராத்தே கிரேடிங்கில் ஹாசினி ஊதா நிற பெல்ட்டிலிருந்து பிரவுன் பெல்ட்டைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளர் உமா கராத்தேவில் ஹாசினியின் வெற்றிகளுக்கு பக்கபலமாக பயிற்சிகள் அளித்து வருகிறார். இவரது வெற்றியின் பின்னணி பயிற்சியாளர் உமா என்றால் மிகையில்லை. மாணவி ஹாசினியின் திறமைக்கேற்ப அவருக்கு பயிற்சியளித்து சாதனையாளராக மிளரச் செய்து வருகிறார்.

கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, பாடல் பாடுவது என ஏதேனும் ஒரு திறமை குழந்தைகளிடம் நிச்சயம் இருக்கும். குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து வெளிக் கொணர்வதுதான் பெற்றோர்களின் தலையாய கடமை. அவர்களின் ஆர்வம், திறமைகளை கண்டறிந்து முதலில் ஊக்குவிக்க வேண்டும். செய்த பின்பு பாராட்ட வேண்டும். அதுபோன்று அப்பா  கார்த்திகேயன், அம்மா ஸ்ரீதேவி மற்றும் பயிற்சியாளர் உமா ஆகியோரின் உறுதுணையுடன் சாதனைகள் பல படைத்து வருகிறார் ஹாசினி.

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget