மேலும் அறிய

Ramadoss: பட்டப்படிப்பு அரசாணை: 'வருவாய் அலுவலர்கள் அதே பணியில் தொடர அனுமதிக்க வேண்டும்' - ராமதாஸ்

பட்டப்படிப்பு அரசாணை குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குரூப் 4 மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி உயர்த்தப்பட்ட வருவாய் அலுவலர்கள் அதே பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று  ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பட்டப்படிப்பு அரசாணை குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குரூப் 4 மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி உயர்த்தப்பட்ட வருவாய் அலுவலர்கள் அதே பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று  ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் பதவி உயர்வில், பட்டப்படிப்பு படித்து பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கால் நூற்றாண்டுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை இப்போது செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதால், 200-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. இது அத்துறையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் வருவாய்த்துறைக்கு வருவாய் உதவியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அப்பணிக்கான அடிப்படை கல்வித் தகுதி பட்டப்படிப்பு ஆகும். அதே பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இளநிலை உதவியாளர்கள் பதவி உயர்வின் மூலம் வருவாய் உதவியாளர்களாக வருகின்றனர். 

நேரடியாகவும், பதவி உயர்வின் மூலமும் வருவாய் உதவியாளர்களாக வந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட, குரூப் 2 தேர்வுகளின் மூலம் நேரடியாக நியமிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கடந்த 1995-ஆம் ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அந்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் 2009-ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழக அரசாணையை உடனடியாக செயல்படுத்தும்படி கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் மீண்டும் ஆணையிட்டிருக்கிறது.

ஒரு நிலை பதவி இறக்கம்

தமிழ்நாடு அரசாணை 1995ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்போது, இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ), வருவாய்க் கோட்ட அலுவலர் (ஆர்.டி.ஓ),  வட்டாட்சியர் உள்ளிட்ட பதவிகளில் இருக்கும் பத்தாம் வகுப்பை கல்வித் தகுதியாகக் கொண்ட குரூப்  4 தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒரு நிலை பதவி இறக்கம் செய்யப்படுவார்கள். மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இவ்வாறு பதவி இறக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.

நேரடியாக வருவாய் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்கப் பட வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணை சரியானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், அந்த ஆணையை 28 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995-ஆம் ஆண்டு முதலே செயல்படுத்தும் போது, இரு வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். முதலாவதாக, இடைப்பட்டக் காலத்தில் பதவி உயர்வு பெற்று உயர்பதவிக்கு சென்றவர்கள், மீண்டும் முந்தைய பணிக்கு பதவி இறக்கம் செய்யப்படும் போது, அது அவர்களை மனதளவில் கடுமையாக பாதிக்கும். அது அவர்களின் பணித்திறனையும் குறைக்கும்.

குழப்பங்கள் ஏற்படும்

இரண்டாவதாக, மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் ஆகியவை நிர்வாக நீதிபதி அதிகாரம் கொண்டவையாகும். இந்த பணிகளுக்கு பதவி உயர்வின் மூலம் வந்தவர்கள் நிர்வாகம் சார்ந்த பல வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருப்பார்கள்; பலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டிருப்பார்கள். தமிழ்நாடு அரசாணை செயல்படுத்தப்படும் போது, அவர்கள் எப்போது அந்த பணியில் அமர்த்தப்பட்டார்களோ, அந்த நாளில் இருந்தே அப்பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதால், அந்த பணியில் இருந்த போது அவர்கள் அளித்த தீர்ப்புகள், பிறப்பித்த ஆணைகள் என்னவாகும்? அவை செல்லுமா... செல்லாதா? என்பன உள்ளிட்ட குழப்பங்கள் ஏற்படும்; அவை நிர்வாகத்தை பாதிக்கும்.

இத்தகைய சூழலில், இரு தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாமல் சுமூகத் தீர்வு ஒன்றை தமிழக அரசு காண வேண்டும். 1995-ஆம் ஆண்டின் அரசாணையை , அது பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து செயல்படுத்தாமல், அந்த ஆணை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து செயல்படுத்துவதே  சுமூகத் தீர்வாக இருக்க முடியும். அவ்வாறு செய்யும் போது, இதுவரை பதவி உயர்வு பெற்ற குரூப் 4 மூலம் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் பதவி இறக்கம் செய்யப்படாமல் இப்போதுள்ள பதவிகளில் தொடர முடியும். கடந்த காலங்களில் அவர்கள் அளித்த தீர்ப்புகளும், பிறப்பித்த ஆணைகளும் தொடர்ந்து செல்லுபடியாகும்.

அதே நேரத்தில் பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட குரூப் 2 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட  வருவாய் உதவியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, 1995ஆம் ஆண்டு அரசாணை அதே ஆண்டில் செயல்படுத்தப்பட்டிருந்தால் என்னென்ன பதவி உயர்வும், பணப்பயன்களும் கிடைத்திருக்குமோ,  அவை அனைத்தையும் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 வருவாய் கோட்ட அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் இதை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. இதன் மூலம் இரு தரப்பினரும் குறைகளின்றி செயல்படக் கூடும்; வருவாய்த்துறை பணிகளும் செம்மையாக நடைபெறும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
உதவித்தொகை, வேலை உறுதி: ஐஐடி சென்னையில் எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ படிப்புகள்! விண்ணப்பிப்பது எப்படி?
உதவித்தொகை, வேலை உறுதி: ஐஐடி சென்னையில் எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ படிப்புகள்! விண்ணப்பிப்பது எப்படி?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
Trump Vs Starmer: “போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
“போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
GOLD SILVER RATE Today: நேற்று அதிரடி, இன்று சரிவு.! ரூ.10,000 குறைந்தது.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன.?
நேற்று அதிரடி, இன்று சரிவு.! ரூ.10,000 குறைந்தது.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன.?
BJP Candidates: பாஜகவை பாடாய்படுத்தும் 6 தொகுதிகள் - அண்ணாமலைக்கு ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்? வானதி விடாப்பிடி
BJP Candidates: பாஜகவை பாடாய்படுத்தும் 6 தொகுதிகள் - அண்ணாமலைக்கு ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்? வானதி விடாப்பிடி
Embed widget