மேலும் அறிய

'நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்' - துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு முறையான கல்வி அளிப்பது குறித்த மாநாடு நடக்கிறது. நவீன சூழலுக்கு தேவையான கல்வி அளிப்பது தொடர்பான மாநாடு நடந்து வருகிறது. தொழில் புரட்சி ஏற்பட்டபோது வேலை ஆட்களின் தேவை அதிகரித்து காணப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், தொழில்நுட்பம் வளர்ந்து வந்தது. இதனால் கணினி தேவை அதிகரித்தது. இதனால் கணினி கல்வி கற்க அவசியம் ஏற்ப்பட்டுள்ளது. இதன் மூலம் கனிணி கல்வி கற்க வேண்டி அவசியம் ஏற்ப்பட்டது.

தொலை தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு படை எடுத்தது. காலம் மாற்றத்திற்கு ஏற்ப கல்வியிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு விவசாயம் மற்றும் தொழில் துறைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மெருக்கேற்ற வேண்டும். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கியது. தற்போது வளரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது.

இன்றைய கால கட்டத்தித்தில் இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாலிடெக்னிக், ஐடிஐ., மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைக்கிறது. இதனால் குறைந்த ஊதியத்தில் பொறியியல் மாணவர்கள் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு காலத்திற்கு ஏற்ற கல்வி கிடைக்காததால் அவர்கள் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் கல்வியில் மாற்றம் அவசியம். தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோனருக்கு ஆங்கில திறன் குறைப்பாடு உள்ளது. பள்ளி பாட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவார்கள். பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். இந்த பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சீனா மற்றும் ஜப்பானில் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். இளைஞர்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட வேண்டும். தாய் மொழியில் கற்பதை அதிகரித்துக் கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. உலக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் 3வது இடத்திற்கு இந்தியா வளர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் டிஜிட்டல் மையமாகியுள்ளது. இதனால் பண்ணாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருகின்றன. திறன் வாய்ந்த மனித வளத்தை உருவாக்கினால் மட்டுமே அந்நிய முதலீடுகளை கவர முடியும். இந்தியவால் உள்ள பிற மாநிலங்கள் தமிழகத்துடம் போட்டி போடும் அளவிற்கு முன்னோறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு கல்வி முறை காலத்திற்க்கு ஏற்ப்ப மாற்றம் பெற்று இளைஞர்களை திறன் மேம்பாடு அடையும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். எனவே, தமிழகத்தில் உள்ள மாநில அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க ஒன்றினைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

தலைப்பு செய்திகள்

OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget