மேலும் அறிய

தமிழி எழுத்தில் விளையாண்டு அசத்தும் அரசுப் பள்ளி மாணவிகள்.. இப்படியும் பொங்கல் வாழ்த்து சொல்லலாம் !

பெரிய பொங்கல் கோலம்  வரைந்து அதன் நடுவில் 'பொங்கல் வாழ்த்து' எனவும், கோலத்தின் கீழே 'இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்து' எனவும் பழமையான தமிழி  எழுத்துகளில் எழுதி அசத்தினர்

வித்தியாசமான முறையில் பொங்கல் கொண்டாடிய மாணவிகளுக்கு பாரட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
 
பொங்கல் பண்டிகை
 
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகையில் தான் தமிழர்களின் பாரம்பரியம் ஒவ்வொன்றாக வெளிவரும். தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர். போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்புடன் இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது பொதுமக்கள் பொங்கல் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பே வாங்க தொடங்குவர். அதில் கோலமாவு, மண் பானைகள், கரும்பு, மஞ்சள் கொத்துகள், வெல்லம், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கி மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். பெரும்பாலும் நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதும் வழக்கம். இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் நமது பண்டைய தமிழி எழுத்துகள் மூலம் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தது வரவேற்பை பெற்றுள்ளது.
 
பொங்கல் கோலத்தில் அசத்திய அரசு பள்ளி மாணவிகள்
 
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது தண்ணீரில் கோலம் போட்டும், தமிழி எழுத்துகளில் பொங்கல் வாழ்த்து எழுதியும்  மாணவிகள் அசத்தினர். பள்ளியில் நடந்த பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தின் போது  மாணவிகள் பொங்கல் தொடர்பான கோலங்களை பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளின் முன்பும் போட்டனர். இதில் ஆறாம் வகுப்பு மாணவிகள் தண்ணீரில் வரைந்த கோலமும், பழமையான தமிழி எழுத்து வாழ்த்தும் அனைவராலும் பாராட்டப்பட்டது. 
 
தண்ணீரில் கோலம்
 
ஒரு பெரிய தாம்பாளத்தில் மணல் பரப்பி அதன் மேல் கோலம் வரைந்து,   மெழுகை சிறுசிறு துகள்களாக செதுக்கி அதன்மேல் பரப்பி பின்பு தாம்பாள தட்டை சூடு படுத்தினர்.  இப்பொழுது மேலே உள்ள மெழுகு உருகி ஒரு படலம் உருவாகியிருக்கும். அதன் மீது தண்ணீரை ஊற்றியபோது கோலம் தண்ணீரில்  மிதப்பது போல தோற்றமளித்தது. பள்ளி மாணவ மாணவிகள் இதைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். இடைநிலை ஆசிரியர் தமயந்தியின் மேற்பார்வையில் மாணவிகள் சுபாஶ்ரீ, செல்வபிரீத்தி, தனுஶ்ரீ, விசாலினி ஆகியோர் இக்கோலத்தை செய்து அசத்தினர்.
 
தமிழியில் கோலம்
 
பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற செயலர் வே.ராஜகுரு  ஒவ்வொரு ஆண்டும் 25 மாணவர்களுக்கு தமிழி கல்வெட்டு எழுத்துகள் பயிற்சி கொடுத்து வருகிறார். இக்கல்வியாண்டில் இப்பயிற்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பெரிய பொங்கல் கோலம்  வரைந்து அதன் நடுவில் 'பொங்கல் வாழ்த்து' எனவும், கோலத்தின் கீழே 'இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்து' எனவும் பழமையான தமிழி  எழுத்துகளில் எழுதி அசத்தினர்.  மாணவிகளை தலைமையாசிரியர் மகேந்திரன் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 
தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget